குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 324

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனிடம் தலைவி இற்செறிக்கப்படுவாளென் பதனைக் கூறிய தோழியை நோக்கி, "யான் ஆண்டு வந்து இரவுக் குறியில் தலைவியைக் கண்டு செல்வேன்; அப்பால் வரைந்து கொள்வேன்" என்று தலைவன்கூற, அது கேட்ட தோழி, "நீ நின் அன்பின் மிகுதியால் வழியின் ஏதம்பாராது வருகின்றாய்; இவள் அதற்கு அஞ்சுவாள்" என்று கூறி வரைவுகடாயது.

கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந்துறை,
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின்
நயன் உடைமையின் வருதி; இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது, . . . . [05]

கவை மக நஞ்சு உண்டாஅங்கு,
அஞ்சுவல் - பெரும! - என் நெஞ்சத்தானே.
- கவை மகனார்.

பொருளுரை:

இவளைக் காண, வளைந்த கால்களையுடைய முதலையின் கொல்லுவதில் வல்ல ஆண் வழியில் செல்லுபவர்களைத் தடுக்கும், கடற்கரைச் சோலையையுடைய பெரிய துறையில், கூட்டமாக மீன்களையுடைய உப்பங்கழியில், நீந்தி நீ அன்புடன் வருகின்றாய். உனக்கு எதுவும் நேர்ந்து விடுமோ என்று இவள் தன்னுடைய மடப்பத்தினால் வருந்துகிறாள். நான் இரட்டைப் பிள்ளைகள் நஞ்சு உண்டால் வருந்தும் தாயைப் போல் அச்சமடைகின்றேன், ஐயா என் நெஞ்சத்தில்.

முடிபு:

பெரும, நீ நயனுடைமையின் நீந்தி வருதி; இவள் தன்மடனுடைமையின் உயங்கும்; யான் அஞ்சுவல்.

கருத்து:

நீ இரவில் வருதல் நன்றன்று.

குறிப்பு:

கானலம் - அம் சாரியை, நெஞ்சத்தானே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

கொடுங்கால் முதலைக் கோள் வல் ஏற்றை - வளைந்த கால்களையுடைய முதலையின் கொல்வதில் வல்ல ஆண், வழி வழக்கு அறுக்கும் - வழியில் செல்லுவதைத் தடுக்கும், கானலம் பெருந்துறை - கடற்கரைச் சோலையையுடைய பெரிய துறை, இன மீன் இருங்கழி நீந்தி - கூட்டமாக மீன்களையுடைய உப்பங்கழியில் நீந்தி, நீ நின் நயன் உடமையின் வருதி - நீ அன்புடன் வருகின்றாய், இவள் தன் மடன் உடமையின் உயங்கும் - இவள் தன்னுடைய மடப்பத்தினால் வருந்துகிறாள், யானது கவை மக நஞ்சு உண்டாங்கு அஞ்சுவல் - நான் இரட்டைப் பிள்ளைகள் நஞ்சு உண்டால் வருந்தும் தாயைப் போல் அச்சமடைகின்றேன், பெரும - ஐயா, என் நெஞ்சத்தானே - என் நெஞ்சத்தில்