குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 369

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவியை நோக்கி, “தலைவனுடன் செல்வாயாக” என்று தோழிகூறியது.

அத்த வாகை அமலை வால் நெற்று,
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம் - தோழி! - நல்கினர் நமரே.
- குடவாயிற் கீரத்தனார்.

பொருளுரை:

அவர் உன்னை உடன் அழைத்துச் செல்ல ஒத்துக் கொண்டுள்ளார். கோடையில் காற்று வீசுவதால் பாலை நிலத்தில் உள்ள வாகை மரங்களின் உலர்ந்த வெள்ளைக் காய்களில் உள்ள விதைகள் கொலுசுகளின் பரலைப் போன்று ஒலிக்கும் காட்டுக்கு அவருடன் நீ செல்வாயாக.

முடிபு:

தோழி, நமர் நல்கினர்; கானம் செல்வாம்.

கருத்து:

தலைவனுடன் போவேமாக.

குறிப்பு:

நமரே: ஏகாரம் அசைநிலை. இரா. இராகவையங்கார் உரை - சிலம்பு கழி நோன்பு தலைவன் அகத்து நிகழ்வது குறித்துக் கூறினாள். செல்வாம் (4) - இரா. இராகவையங்கார் உரை - செல்வாம் எனத் தோழி தன்னை உளப்படுத்தித் தன்மைப் பன்மையாற் கூறினாள் என்பது தோழியும் உடன்போதல் வழக்கு இன்மையால் இயையாமை காண்க. வாகை நெற்று ஒலித்தல்: குறுந்தொகை 7 - ஆரியர் கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும், குறுந்தொகை 369 - அத்த வாகை அமலை வால் நெற்று அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம், அகநானூறு 45 - உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடு களப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 151 - உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும்.

சொற்பொருள்:

அத்த வாகை - பாலை நிலத்தின் வாகை மரம், அமலை - ஒலி, வால் - வெள்ளை, நெற்று - உலர்ந்தக் காய், அரி - பரல், ஆர் - அழகிய, சிலம்பின் - கொலுசின், அரிசி - விதை, ஆர்ப்ப - ஒலிக்க, கோடை - வெயில் காலம், தூக்குங் கானம் - காற்று அசைகின்ற காடு, செல்வாந் தோழி - செல்வாய்த் தோழி, நல்கினர் நமரே - அவர் ஒத்துக் கொண்டுள்ளார்