குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 216

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச் சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும் வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவி கூறியது.

அவரே, கேடுஇல் விழுப்பொருள் தருமார், பாசிலை
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே;
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, ஏங்கிப்
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே;
"அன்னள் அளியள்" என்னாது, மா மழை . . . . [05]

இன்னும் பெய்யும்; முழங்கி
மின்னும் - தோழி! - என் இன் உயிர் குறித்தே.
- கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.

பொருளுரை:

தோழி! அத்தலைவர் கேடில்லாத உயர்ந்த செல்வத்தை கொணரும் பொருட்டு பச்சை இலைகளை உடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்; யான்! தொகுதியார்ந்த விளக்கத்தை உடைய வளைகள் நெகிழும்படி கவலையுற்று படுத்தல் அமைந்த படுக்கையின் கண் வீழ்ந்து துன்பம் மிக்கேன்; கரிய மேகம் அத்தகைய துன்பத்தைஉடையாள் இரங்கத் தக்காள் என்று எண்ணாமல் இன்னும் மழையைப் பெய்யும் பொருட்டு முழக்கம் செய்து எனது இனிய உயிரைக் கொள்ளுதலைக் குறித்து மின்னா நின்றது.

முடிபு:

தோழி, அவர் காடிறந்தோர்; யான்படர் கூர்ந்திசின்; மழைஎன் உயிர் குறித்து மின்னும்.

கருத்து:

கார்காலம் வந்தது கண்டு யான் துன்புறு வேனாயினேன்.