குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 377

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

“தலைவன் பிரிந்தமையால் என் உடல் மெலியவும் அவனது இயல்பு நினைந்து யான் ஆற்றினேன்; நீ ஆற்றாயாதல் என்?” என்று தலைவி, வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கூறியது.

மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,
மாற்று ஆகின்றே - தோழி! - ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே. . . . . [05]
- மோசி கொற்றனார்.

பொருளுரை:

தோழி! தன் இயல்பு முற்றும் அறிதற்குப் பொருந்தாத தலைவனோடு யாம் செய்துகொண்ட ஒரு சிறிய நல்ல நட்பானது பூவினையொத்த மையுண்ட கண்களின் மாட்சிமைப்பட்ட அழகு நீங்க வளையையுடைய அழகிய மெல்லியதோள் நெகிழ்ந்ததன் மேலும் பரிகாரமாக ஆகின்றது; அது கருதியான் ஆற்றா நிற்பவும் நீ ஆற்றினாயல்லை.

முடிபு:

தோழி, நட்பு மாற்று ஆகின்று; ஆற்றலை.

கருத்து:

தலைவனது இயல்பை உணர்ந்து யான் ஆற்றினேன்.