குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 392

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவு நீட்டித்தானாக அவன் சிறைப்புறத்தே நிற்குங்கால் தோழி வண்டினை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவி இன்னும் தன்வீட்டிலேயே உறைகின்றாளென்று சொல்வாயாக” என்றது.

அம்ம வாழியோ - மணிச் சிறைத் தும்பி!
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை . . . . [05]

தமரின் தீராள் என்மோ - அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே!
- தும்பிசேர் கீரனார்.

பொருளுரை:

அழகிய இறகுகளை உடைய தும்பியே! நான் கூறுவதைக் கேள்! நல்ல சொற்களைக் கூறுவதற்கு அஞ்சத் தேவையில்லை. தேன் கூடுகள் மன்னனின் நுண்ணிய கேடயங்களைப் போல் வரிசையாகத் தொங்கும் ஓங்கிய உயர்ந்த மலைகளையுடைய அவருடைய நாட்டுக்கு நீ சென்றால், தலைவனிடம். “கடமை மான்கள் நெருங்கிய தோட்டத்தில் அழகிய சிறிய தினையிடத்தே அவளுடைய அண்ணன்மார் களைக்கொட்டால் களையைக் கொத்தித் தோண்டுவதால் புழுதி கிளம்பும் அவ்விடத்தில், அவர்களை விட்டு விலகி உன்னிடம் வர முடியாத நிலையில் அவள் இருக்கின்றாள்” எனக் கூறு.

முடிபு:

தும்பி, அச்சம் இல்லை; சேறியாயின் மலைகிழவோர்க்கு, களைஞர் தங்கை தீராளென்மோ.

கருத்து:

வண்டே, தலைவியினுடைய நிலையை நீ போய்த் தலைவனுக்குச் சொல்லுவாயாக.

குறிப்பு:

அம்ம - அம்ம கேட்பிக்கும் (தொல்காப்பியம், இடையியல் 28). கிழவோர்க்கே - ஏகாரம் ஈற்றசை.

சொற்பொருள்:

அம்ம - நான் கூறுவதைக் கேட்பாயாக, வாழியோ - அசைநிலை, நீடு வாழ்வாயாக, (ஓகாரம் அசைநிலை), அணி - அழகிய, சிறை - சிறகு, தும்பி - தும்பி, நன்மொழிக்கு அச்சமில்லை - நல்ல சொற்கள் சொல்வதற்கு அஞ்சத் தேவை இல்லை, அவர் நாட்டு - அவருடைய நாட்டின், அண்ணல் - ஓங்கிய, நெடுவரை - உயர்ந்த மலைகளை, சேறி ஆயின் - நீ சென்று அடைந்தால், கடமை - கடமை மான்கள் நெருங்கிய, மிடைந்த - நெருங்கிய, துடவை - தோப்புகளில், அம் - அழகிய, சிறுதினை - சிறிய தினை, துளர் எறி - களைக்கொட்டால் களையைக் கொத்தித் தோண்டுவதால், நுண் துகள் - நுண்மையான புழுதி, களைஞர் - வயலில் களையை நீக்குபவர்கள், தங்கை - தங்கை, தமரின் - உறவினர்கள், தீராள் - பிரிய முடியாத நிலையில் இருப்பவள், என்மோ - என்று சொல், அரசர் - மன்னர்கள், நிரை செலல் - வரிசையாக அடுக்கிய, நுண் தோல் போல - நுண்ணிய கேடயங்களைப் போல், பிரசம் தூங்கு - தேன் கூடுகள் தொங்கும், மல கிழவோர்க்கே - மலைநாடன்