குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 256

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பொருள்வயிற் பிரிய எண்ணிய தலைவன் தன் கருத்தைத் தலைவிக்கு உணர்த்த, அவள் வெய்துற்று அழுதாளாக, அது கண்ட தலைவன் செலவு தவிர்ந்து கூறியது.

'மணி வார்ந்தன்ன மாக்கொடி அறுகைப்
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி,
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச் . . . . [05]

சொல்லாமுன்னர், நில்லா ஆகி,
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பொருளுரை:

பொலிவை உடைய குழையை அணிந்தோய் நீல மணி ஒழுகினாற் போன்ற கரிய கொடியாகிய அறுகினது பிணிப்பு நீங்கிய மெல்லிய தண்டை பெண் மானோடு வயிறு நிரம்ப உண்ட ஆண் மான் துள்ளுகின்ற காடு பின்னாகச் சென்று தொழில் நன்மை உண்டாகப் பெற்று மீண்டு வருவேம்; அக்காலத்தளவும் நின்னாற் பொறுத்திருத்தல் இயலுமோ? என்று நாம் சொல்லாமைக்கு முன்னமே தலைவியின் கண்கள் பழைய நிலையில் நில்லாமல் கலங்கி நீரால் மாறுபடுதலை உடைய அழுகை அமையாவாகி எம் தேரைத் தடை செய்தன.

முடிபு:

‘பூங்குழையோய், கானம் பிற்பட வினைநலம் படீஇ வருதும்; தாங்கல் ஒல்லுமோ? எனச் சொல்லா முன்னர், தெரிவை கண் அழுதல் ஆனாவாகித் தேரை விலங்கின.

கருத்து:

தலைவி என் பொருட்பிரிவுக்கு உடம்படாமையின் யான் செல்லேன்.