குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 144

பாலை - செவிலித்தாய் கூற்று


பாலை - செவிலித்தாய் கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தலைவனுடன் போனாளாக, அவளைப் பிரிந்த செவிலித்தாய், “ஆயமகளிரோடு பிரிவின்றி விளையாடும் என் மகள் இப்பொழுது பாலைநிலத்திலே பரல் தன் அடிகளை வருத்தா நிற்க எம்மைப் பிரிந்து சென்றனள்” என்று கூறி வருந்தியது.

கழிய காவி குற்றும் கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர,
இவ்வழிப் படுதலும் ஒல்லாள், அவ்வழிப்
பரல் பாழ் படுப்பச் சென்றனள் மாதோ, . . . . [05]

செல் மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.
- மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்.

பொருளுரை:

உப்பு நீருடைய குளத்தில் செங்குவளை மலர்களைப் பறித்தும், வெள்ளை மேல் பகுதியையுடைய கடல் அலைகளில் விளையாடியும், பிரியாது ஒன்றாகவே இருந்த தன் தோழியருடன் அவரவர்க்குப் பிடித்தமான விளையாட்டுகளையும் விளையாடும் என் மகள், இவ்விடத்தில் பொருந்துதற்கும் உடன்படாளாகி, இப்பொழுது முகில்கள் விரைவாகச் சென்று மலை உச்சியில் தங்கும், வானத்து அளவு உயர்ந்து விளங்கும் குறுக்கு மலைகள் உடைய நாட்டிற்கு, தன் கால்கள் பாதையில் உள்ள பருக்கைக் கற்களால் பாழாகும்படி, தலைவனுடன் சென்று விட்டாள்.

குறிப்பு:

மாதோ - மாது, ஓ - அசை நிலைகள், நன்றே - ஏகாரம் அசை நிலை, நாட்டே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

கழிய - உப்பு நீருடையக் குளத்தில், காவி - சிவப்பான மலர்கள் (செங்குவளை), குற்றும் - பறித்தும், கடல - கடலில் உள்ள, வெண்டலைப் - வெள்ளைத் தலைகளையுடைய, புணரி ஆடியும் - அலைகளில் ஆடியும், நன்றே - மிக, பிரிவு இல் ஆயம் - பிரிவு இல்லாத தோழியருடன், உரியது ஒன்று அயர - எல்லோருக்கும் உரிய விளையாட்டையும் புரிய, இவ்வழிப் படுதலும் ஒல்லாள் - இந்த வழிக்கு ஒத்து இருக்காமல், அவ்வழி - அந்த வழியில், பரல்பாழ் படுப்பச் சென்றனள் - பருக்கைக் கற்கள் தன் கால்களை பாழாக்கும்படி சென்று விட்டாள், மாது - அசை நிலை, ஓ - அசை நிலை, செல்மழை - செல்லும் முகில்கள், தவழும் சென்னி - தவழும் மலை உச்சி, விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே - வானத்து அளவும் உயர்ந்த விளக்கத்தை உடைய குறுக்கிடும் மலைகள் உள்ள நாட்டிற்கு (சென்று விட்டாள் என் மகள்).