குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 279

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை ஆற்றல் வேண்டும் என்று தோழி வற்புறுத்திய பொழுது தலைவி ஆற்றாமையின் காரணத்தைக் கூறியது.

திரிமருப்பு எருமை இருள் நிற மைஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு அசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல் . . . . [05]

துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும்பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?
- மதுரை மருதனிளநாகனார்.

பொருளுரை:

தோழி! மழை கழுவுதலை மறந்த கரிய பெரிய பொற்றைக் கல் புழுதி படிந்த யானையைப் போல விளங்கத் தோன்றுகின்ற பெரிய பல மலைகளைக் கடந்து சென்று இலக்கணத்தால் திருந்திய சந்துகளை உடைய மூங்கிலைப் போன்ற என் தோள்களை நினையாதோர் முறுக்கிய கொம்பையும் இருள் நிறத்தையும் உடைய எருமையினது வளர்கின்ற கழுத்தின்கண் கட்டப்பட்ட பிளந்த வாயை உடைய தெளிந்த ஓசையை உடைய மணியானது தனிமையைக் கொண்ட நடு இரவில் அவ்வெருமை நடக்கும் தோறும் ஒலிக்கின்ற இக் காலம் தாம் வருதற்குரிய செவ்வியாக இருப்பவும் அவர் வாராராயினர்.

முடிபு:

போகி உள்ளாதோர், வாரார்.

கருத்து:

தலைவர் வருதற்குரிய செவ்வி இஃதாக இருந்தும் அவர் வந்திலரென ஆற்றேனாயினேன்.