குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 273

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிவான் என எண்ணிக் கவன்ற தலைவியை நோக்கி, "தலைவன் பிரிய எண்ணினும் நம் நிலை நோக்கிச் செலவு தவிர்வான்" என்று தோழி கூறித் துணிவை உண்டாக்கியது.

அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங்காடு உளரும் அசைவளி போல,
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனஆயின், கண்டது மொழிவல்;
பெருந்தேன் கண்படு வரையில் முது . . . . [05]

மால்புஅறியாது ஏறிய மடவோன் போல,
ஏமாந்தன்று, இவ் உலகம்;
நாம் உளேம் ஆகப் பிரயலன் தெளிமே.
- சிறைக்குடி யாந்தையார்.

பொருளுரை:

இரவில் தாதை உடைய அரும்பு விளங்க பெரிய காட்டில் தடவி வருகின்ற அசைகின்ற காற்றைப் போல குளிர்ந்தனவாகிய நறுமணம் வீசுகின்ற ஒள்ளிய நெற்றியை உடையோய் நீ தலைவன் பிரிவான் என்று வருந்தினையாயின் யான் அறிந்ததைச் சொல்லுவேன் கேட்பாயாக; பெரிய தேனிறால் தங்கி இருக்கும் மலைப் பக்கத்தில் அத்தேனிறாலைப் பெறும் பொருட்டு பழைய கண்ணேணியின்மேல் அறியாமல் ஏறிய அறிவிலாதானைப் போல இந்த உலகமானது ஏமாந்தது; நாம் உயிரோடு இருப்ப அது காறும் தலைவன் நின்னைப் பிரிந்து செல்லான்; இதனைத் தெளிவாயாக.

முடிபு:

நுதலோய், நொந்தனையாயின் மொழிவல்; இவ்வுலகம் ஏமாந்தன்று, உளேமாகப் பிரியலன்; தெளிமே.

கருத்து:

தலைவன் நின்னைப் பிரிந்து செல்லான்.