குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 168

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பொருள் தேடத் துணிந்த நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரியின் உயிர்வாழ்தல் அரிது” என்று தலைவன் கூறியது.

மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே, நல் மா மேனி;
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள் . . . . [05]

மணத்தலும் தணத்தலும் இலமே;
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
- சிறைக்குடி யாந்தையார்.

பொருளுரை:

நெஞ்சே! தலைவி நல்ல மாமையையுடைய மேனி மாரிக்காலத்தில் மலரும் பிச்சியினது நீர் ஒழுகும்கொழுவிய அரும்புகளில் பெரிய பசிய பனங் குடையில் பலவற்றை ஒருங்கே வைத்து மூடி பெருமழை பெய்தலையுடைய விடியற் காலத்தே விரித்துவிட்டாற் போன்ற நறுமையையும் தண்மையையும் உடையவள்; நீரில் விடும் தெப்பத்தைப் போன்ற வளைந்த சந்தினையுடைய பருத்த அவள் தோள்களை பொருந்துதலும் பிரிதலும் பிரிவேமாயின் உயிர் வாழ்தல் அதனைக் காட்டிலும் இல்லேம்.

முடிபு:

மேனி நறுந்தண்ணியள்; தோள் மணத்தலும் தணத்தலும் இலம்; பிரியின் வாழ்தல் அதனினும் இலம்.

கருத்து:

தலைவியைப் பிரிதல் அரிது.