குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 323

முல்லை - தலைவன் கூற்று


முல்லை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தான் மேற்கொண்ட வினை முடிந்தவிடத்துத் தலைவன் பாகனை நோக்கி, "தலைவியைப் பிரிந்திருக்கும் நாள் நன்னாளன்று; பயனற்றது; ஆதலின் அவளை யடையும்படி விரைவில் தேர் விடுக" என்பது படச்சொல்லியது.

எல்லாம் எவனோ? பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல் . . . . [05]

அரிவை தோள் - அணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளே.
- பதடி வைகலார்.

பொருளுரை:

பாணர்கள் படுமலைப் பாலையென்னும் பண்ணை வாசித்த இசையினது வானத்தின்கண் எழுகின்ற நல்ல உச்ச ஒலியை ஒப்ப ஒலி யுண்டாக மழை பெய்த கொல்லையின் கண் மலர்ந்த முல்லையினது பசிய அரும்பினது தாதின் மணம் போன்றமணம் வீசுகின்ற நல்ல நெற்றியையுடைய தலைவியின் இரண்டு தோள்களிலே துயின்று சென்ற நாட்களே இவ்வுலகத்தில் வாழும் நாட்களாகும்; ஏனைய நாட்களெல்லாம் என்ன பயனை உடையன? அவை உள்ளீடில்லாத கருக்காயைப் போன்ற நாட்கள்.

முடிபு:

அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாள் வாழும் நாள்; எல்லாம் எவனோ? பதடிவைகல்.

கருத்து:

விரைவில் தலைவிபாற் போய்ச் சேர்தல் வேண்டும்.