குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 267

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

‘முன்னோரைப் பின்பற்றி நாமும் பொருள் தேடச் செல்வேம்' என்று எண்ணிய தலைவன் பிறகு வாழ்நாளது சிறுமையையும், இளமையினது அருமையையும் கருதிச் செலவு தவிர்ந்தது.

இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவது ஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க்
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய . . . . [05]

ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன்இல் கோள் நன்கு அறிந்திசினோரே.
- காலெறி கடிகையார்.

பொருளுரை:

நெஞ்சே நாள்தோறும் முறையாக அடைதலாகிய மரபை உடைய கூற்றுவனது கண்ணோட்டம் இல்லாத கொலைத் தொழிலை நன்றாக அறிந்தோர் பெரிய இடத்தை உடைய பூமியின்கண் தொக்க பயனை உடைய பெரிய செல்வம் ஒருங்கே பொருந்துவதாயினும் கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை உண்டாற் போன்ற சுவையை உடைய வெள்ளிய பல்லினிடத்தே ஊறிய குற்றம் இல்லாத இனிய நீரையும் திரட்சி அமைந்த குறிய வளையையும் உடைய இளைய தலைவி நீங்கி இருப்ப. முயற்சியின் பொருட்டு தாம் மட்டும் தனித்துப் பிரிந்து செல்லார்.

முடிபு:

அறிந்திசினோர் வளம் இயைவதாயினும் குறுமகள் ஒழியப் பிரியார்.

கருத்து:

நான் தலைவியைப் பிரியேன்.