குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 333

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவியின் நோய் மிகுதியைக் கண்ட தோழி, “அறத்தொடு நின்று தலைவனது வரவை நமர் ஏற்றுக் கொள்ளச் செய்வேன்” என்றது.

குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன்
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
கறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணிக் குறை வருத்தம் வீட, . . . . [05]

துணியின் எவனோ - தோழி! - நம் மறையே?
- உழுந்தினைம்புலவனார்.

பொருளுரை:

தோழி! குறிய படையாகிய அம்பையும் வளைந்த வில்லையும் உடைய வேட்டுவனது தினைப்புனத்தை உண்டதனாற் கடியப்பட்ட பசிய கண்ணையுடைய யானை நறிய தழையுடையை அணிந்த மகளிர் ஓட்டுகின்ற கிளிகளோடு குறிய பொற்றைக் கல்லினிடத்துச் செல்ல மேல்நோக்கும் மலையையுடைய நாட்டினனாகிய தலைவன் வினை நிறைவேறாமற் குறையாக நிற்றலினால் உண்டாகிய வருத்தம் நீங்கும்படி நம்முடைய இரகசியத்தை தாய்க்குத் தெரிவித்தால் என்ன குற்றம் உளதாகும்?

முடிபு:

தோழி, நாடன் வருத்தம் வீட நம்மறை துணியின் எவன்?

கருத்து:

யான் அறத்தொடு நிற்பேன்.