குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 096
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைமகன் வரையாதுவந்து ஒழுகிய காலத்தில் அவனைத் தோழி இயற்பழித்தாளாக, அது கேட்ட தலைவி தோழியைச் சினந்து கூறியது.
அருவி வேங்கை பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ என்றி யான் அது
நகை என உணரேன் ஆயின்
என் ஆகுவை கொல் நல் நுதல் நீயே.
யான் எவன் செய்கோ என்றி யான் அது
நகை என உணரேன் ஆயின்
என் ஆகுவை கொல் நல் நுதல் நீயே.
- அள்ளூர் நன்முல்லையார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
அருவி வேங்கைப் பெருமலை நாடற்
கியானெவன் செய்கோ வென்றி யானது
நகையென வுணரே னாயி
னென்னா குவைகொ னன்னுத னீயே.
கியானெவன் செய்கோ வென்றி யானது
நகையென வுணரே னாயி
னென்னா குவைகொ னன்னுத னீயே.
பொருளுரை:
நல்ல நெற்றியை உடையாய் அருவியினதருகில் வளர்ந்த வேங்கை மரங்களையுடைய பெரிய மலையையுடைய நாட்டுக்குரிய தலைவன் திறத்து நான் என்ன செய்வேன் என்று கூறி அவனை இயற்பழித்தாய்; நீ அங்ஙனம் கூறியதை நான் விளையாட்டு மொழி யென்று உட்கொண்டிரேனாயின் நீ என்ன பாடு படுவாய்? மிகவும் துன்புறுவாயன்றே.
முடிபு:
நன்னுதல், நாடற்கு யான் எவன் செய்கோ என்றி; யான் அது நகையென உணரேனாயின், நீ என்னாகுவை?
கருத்து:
நீ தலைவனை இயற்பழித்தல் தகாது.