குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 242

முல்லை - செவிலித்தாய் கூற்று


முல்லை - செவிலித்தாய் கூற்று

பாடல் பின்னணி:

தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று மீண்டு வந்த செவிலித் தாய், "தலைவனும் தலைவியும் பிரிவின்றி ஒன்றி வாழ்கின்றனர். அவன் எங்கே சென்றாலும் விரைவில் வந்து விடுகின்றான்" என்று நற்றாய்க்குக் கூறியது.

கானங்கோழிக் கவர் குரற் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும் . . . . [05]

சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே.
- குழற்றத்தனார்.

பொருளுரை:

தலைவி காட்டுக் கோழியினது கவர்த்த குரலை உடைய சேவலினது ஒள்ளிய புள்ளிகளை உடைய கழுத்தில் தண்ணிய நீர்த்துளி துளிக்கும்படி புதலின்கண் நீர் ஒழுகும் மலர் மணம் வீசுகின்ற முல்லை நிலத்தின் கண் அமைந்த சிறிய ஊரில் உள்ளாள்; தலைவனது தேர் வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொண்டு வேற்றூருக்குச் சென்றாலும் சென்ற ஊரின் கண்ணே தங்கிப் பின் வருதலை அறியாது; உடனே வந்து விடும்.

முடிபு:

மடந்தை சீறூரோள்; செம்மல் தேர் செலினும் அறியாது.

கருத்து:

தலைவனும் தலைவியும் பிரிவின்றி ஒன்றி வாழ்கின்றனர்.