குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 054

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைவி தோழியிடம் உரைத்தது.

யானே யீண்டையேனே, என் நலனே
ஏனல் காவலர் கவண் ஓலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு ஒழிந்தன்றே . . . . [05]
- மீனெறி தூண்டிலார்.

பொருளுரை:

நான் மட்டுமே இங்கிருக்கின்றேன். ஆனால் என்னுடைய பெண்மை நலனோ, தினைப்புனம் காப்போரின் கவண் ஒலிக்கு அஞ்சி, காட்டு யானை கைவிட்ட பசுமையான மூங்கில் மீனைக் கவர்ந்துகொண்ட தூண்டிலைப்போல் நிமிர்ந்து மேலே செல்லும் காட்டையுடைய என் தலைவனுடன், அவ்விடத்திலேயே நீங்கியது.

குறிப்பு:

குறுந்தொகை 54 - கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும், குறுந்தொகை 74 - விட்ட குதிரை விசைப்பினன்ன விசும்பு தோய் பசுங்கழை, புறநானூறு 302 - வெடி வேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே, ஐங்குறுநூறு 278 - கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும். உ. வே. சாமிநாதையர் உரை - யானை வளைக்குங் காலத்தில் வளைந்து அது கைவிடத் தூண்டிலைப் போல மூங்கில் நிமிரும் நாடன் என்றது தன் நெஞ்சத்து அன்புளதாகிய காலத்து நம்பால் மருவிப் பணிந்து ஒழுகி அன்பற்ற காலத்துப் பணிவின்றித் தலைமை செய்து நம் நலங்கொண்ட தன் கொடுமை போன்ற ஒழுகுகின்றான் என்பதாம். உள்ளுறை - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - ஏனலைக் காப்பவரது கவணின் ஒலியை அஞ்சி யானை நுகர்தற்கு வளைத்த கழையைக் கைவிட்டுச் செல்லுமாறு போல, ஊரார் தூற்றும் அலரை அஞ்சித் தன் எண்ணத்தின்படி தாழ்த்தி நுகர்ந்த என்னைக் கைவிட்டுச் சென்றான் என்பதாம். யானே - பிரிநிலை, யீண்டையேனே - ஏகாரம் அசைநிலை, நலனே - ஏகாரம் அசைநிலை, வெரீஇ - சொல்லிசை அளபெடை, தூண்டிலின் - இன் உருபு ஒப்புப் பொருளது, ஒழிந்தன்றே - ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:

யானே யீண்டையேனே - நான் மட்டும் இங்கிருக்கின்றேன், என் நலனே - என் பெண்மை நலன், ஏனல் காவலர் - தினைப்புனம் காப்போர், கவண் ஓலி வெரீஇ - கவண் ஒலிக்கு அஞ்சி, கான யானை கைவிடு பசுங்கழை - காட்டு யானை கைவிட்ட பசுமையான மூங்கில், மீன் எறி தூண்டிலின் - மீனைக் கவர்ந்துகொண்ட தூண்டிலைப்போல், நிவக்கும் - மேலே செல்லும், கானக நாடனொடு - காட்டையுடைய தலைவனுடன், ஆண்டு ஒழிந்தன்றே - அங்கு நீங்கியது