குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 327

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் சிறைப்புறத்தே நிற்ப ஆற்றை நோக்கி, "நீ தலைவனைக்காட்டிலும் கொடியை" என்று கூறும் வாயிலாகத் தலைவி அவனது கொடுமையை உணர்த்தியது.

"நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று" என உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும், நன்றும்
நின்நிலை கொடிதால் - தீம் கலுழ் உந்தி!
நம் மனை மட மகள், "இன்ன மென்மைச் . . . . [05]

சாயலள்; அளியள்" என்னாய்,
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே.
- அம்மூவனார்.

பொருளுரை:

பொல்லாங்கையுடைய ஆறே நாம் செல்லும் மனையிடத்துள்ள மடப்பத்தையுடைய தலைவி இதனைப் போன்ற மெல்லிய சாயலை உடையவள் அளிக்கத் தக்காள் என்று கருதாயாகி மலைப்பக்கம் பொலிவழியும்படி அங்கே வளர்ந்த வாழை மரத்தைப் பெயர்த்துக் கொணர்ந்தனை; ஆதலின் தாம் தண்ணளி செய்தால் வாழ்கின்ற வறியோர்பால் அன்பு இல்லாராதல் நல்ல தென்று உணர்ந்த குன்றநாடனது நிலையைக் காட்டிலும் நினது இயல்பு மிகவும் கொடியது.

முடிபு:

கலுழி, புல்லென வாழை தந்தனை; குன்ற நாடன் றன்னினும் நின்னிலை கொடிது.

கருத்து:

தலைவன் கொடியன்.