குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 237
பாலை - தலைவன் கூற்று
பாலை - தலைவன் கூற்று
பாடல் பின்னணி:
பொருளுக்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் அதனைஈட்டிக் கொண்டு மீள்கையில், தேர்ப்பாகனை நோக்கி, ‘‘எனக்கும்தலைவிக்கும் உள்ள இடையிடம் சேயதாகவும் பல இடையூறுகளைஉடையதாகவும் உள்ளது. ஆயினும் என் நெஞ்சு அவள்பால் விரைந்துசென்றது” என்று கூறியது.
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇய,
நெஞ்சு நப் பிரிந்தன்று ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின், அஃது எவனோ, நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே
மாக்கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு . . . . [05]
கோள் புலி வழங்கும் சோலை,
எனைத்து என்று எண்ணுகோ, முயக்கிடை மலைவே.
நெஞ்சு நப் பிரிந்தன்று ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின், அஃது எவனோ, நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே
மாக்கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு . . . . [05]
கோள் புலி வழங்கும் சோலை,
எனைத்து என்று எண்ணுகோ, முயக்கிடை மலைவே.
- அள்ளூர் நன்முல்லையார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய
நெஞ்சுதப் பிரிந்தன் றாயினும் எஞ்சிய
கைபிணி நெகிழின்அ தெவனோ நன்றும்
சேய வம்ம இருவா மிடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு . . . . [05]
கோட்புலி வழங்குஞ் சோலை
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.
நெஞ்சுதப் பிரிந்தன் றாயினும் எஞ்சிய
கைபிணி நெகிழின்அ தெவனோ நன்றும்
சேய வம்ம இருவா மிடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு . . . . [05]
கோட்புலி வழங்குஞ் சோலை
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.
பொருளுரை:
பாக! அஞ்சுதலைஅறியாமல் நாம் விரும்பும்தலைவியைத் தழுவும் பொருட்டு என் நெஞ்சு நம்மைப் பிரிந்து சென்றது; ஆனாலும் குறைபாடாக உள்ள கையாற்றழுவுதல் நெகிழுமாயின் நெஞ்சு சென்று தழுவிய அதனால் பயன் யாது? யானும் தலைவியுமாகிய இருவருக்கும் இடையில்உள்ள இடங்கள் மிக்க சேய்மையைஉடையன; தலைவியோடு சேர்தற்குஇடையிலே உள்ள தடையாகிய கொலைசெய்யும் புலியானது கரியகடலின் அலையைப் போல ஆரவாரம் செய்து வலமாக எழுந்து உலவுகின்றசோலை எத்தனை என்று எண்ணுவேன்?
முடிபு:
நெஞ்சு பிரிந்தன்று; ஆயினும் நெகிழின் எவன்? இடைசேய; மலைவாகிய சோலை எனைத்தென்று எண்ணுகு?
கருத்து:
தலைவி உள்ள இடம் நெடுந்தூரத்தில் உள்ளது.






