குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 201

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனும் தலைவியும் மணந்துகொண்டு இல்லறம் நடத்தும்மனைக்கண் சென்ற தோழி, “வரைந்துகொள்ளும் வரையில் நீ வேறுபடாமல் எங்ஙனம் ஆற்றியிருந்தாய்” என்று கூற, “நான் அங்ஙனம் ஆற்றியிருக்கும் வண்ணம் அயன்மனைக் கிழத்தி முன்பு தலைவன் வரவைக் கூறினாள்; அவள் வாழ்க!” என்று தலைவி சொல்லியது.

அமிழ்தம் உண்க அயல் இல் ஆட்டி!
பால் கலப்பு அன்ன தேக் கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லியம் புளி மாந்தி அயலது
முள் இல் அம் பணை மூங்கில் தூங்கும் . . . . [05]

கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை, வரும் என்றாளே.
- பாடியவர் பெயர் கிடைக்கவில்லை.

பொருளுரை:

தோழி! அயன்மனைக் கிழத்தி பாலைக் கலந்தாற் போன்ற இனிமையையுடைய தேமாம் பழத்தைத் தின்று கரிய மெல்லிய சிறகுகளையும் கூரிய நகங்களையும் உடைய வௌவால் நெல்லியினது புளித்த காயை உண்டு அயலிலுள்ளதாகிய முள்ளில்லாத அழகிய பருத்த மூங்கிலின் கண்ணே தொங்குகின்ற மூங்கிற் கோல்கள் உயர்ந்து வளர்ந்த சோலைகளையுடைய மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனை வரைவுக்குரியவற்றோடு வருவானென்று கூறினாள்; ஆதலின் அவள் அமிழ்தத்தை உண்பாளாக!

முடிபு:

அயலிலாட்டி நாடனை வருமென்றோள்; அமிழ்தம் உண்க!

கருத்து:

தலைவன் வரைவொடு வருதலை முன்பு கூறி எனக்குஉறுதி யுண்டாக்கிய அயலிலாட்டி வாழ்வாளாக!