குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 187

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைபொருட்குப் பிரிந்த தலைவன் நீட்டித்தானாக, அவன் மேற்குறையேற்றி உரையாடிய தோழியை நோக்கி, “அவர் தாம் சென்றவினையை நிறைவேற்றிக் கொண்டு விரைவில் வரும் வன்மையையுடையார்” என்று தலைவி கூறியது.

செவ்வரைச் சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்திப்
பெருவரை நீழல் உகளும் நாடன்,
கல்லினும் வலியன் தோழி,
வலியன் என்னாது, மெலியும் என் நெஞ்சே . . . . [05]
- கபிலர்.

பொருளுரை:

தோழி! செவ்வியமலைப் பக்கத்தின் கண் தங்குதலை யுடைய எண் கால் வருடையினது குட்டி தன் தாயின் மடியினின்றும் சுரக்கின்ற இனிய பாலை வயிறு நிறைய உண்டு பெரிய மலைப் பக்கத்திலுள்ள நிழலில் துள்ளுதற் கிடமாகிய நாட்டையுடைய தலைவன்; கல்லைக் காட்டிலும் வன்மையை உடையவன்; என் நெஞ்சு அவன் வன்மையையுடையா னென்று கருதாமல் அவன் திறத்துமெலிவை அடையும்.

முடிபு:

தோழி, நாடன் வலியன்; என் நெஞ்சு மெலியும்.

கருத்து:

தலைவன் வரைபொருள் பெற்று விரைவில் மீள்வான்.