குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 139

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையர் வீட்டிற்குச் சென்ற தலைவன் தலைவியிடத்தே மீண்டு வந்த காலத்தில் தோழி, “நீ இங்கே வந்தாற் பரத்தையர் பழி கூறுவார்; ஆதலின் இங்கே வாரற்க” என்று கூறியது.

மனை உறை கோழிக் குறுங்கால் பேடை,
வேலி வெருகு இன மாலை உற்றெனப்
புகுமிடம் அறியாது தொகுபுடன் குழீஇய
பைதல் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு,
இன்னாது இசைக்கும் அம்பலொடு . . . . [05]

வாரல், வாழியர் ஐய, எம் தெருவே.
- ஒக்கூர் மாசாத்தியார்.

பொருளுரை:

ஐய! இல்லின்கண் உறைகின்ற கோழியினது குறிய காலையுடைய பேடையானது வேலிக்கு அயலில் உள்ள காட்டுப் பூனையின் கூட்டம் மாலைக் காலத்தில் உற்றதாக அதற்கு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல் சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டு துன்பத்தையுடைய குஞ்சுகளாகிய இனத்தை அழைத்துக் கூவினாற் போல இன்னாததாகிப் பரத்தையராற் கூறப்படும் பழி மொழியோடு எம்முடைய தெருவிற்கு வருதலை ஒழிவாயாக; நீ வாழ்வாயாக!

முடிபு:

ஐய, அம்பலொடு எம் தெரு வாரல்; வாழியர்!

கருத்து:

எம் தெருவிற்கு வரின் பரத்தையர் பழி கூறுவர்.