குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 087
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் தெய்வங் காட்டிச் சூளுற்றுப் பின் பிரிந்து நீட்டித்தானாக, அத்தெய்வம் ஒறுக்குமோவென்று அஞ்சிய தலைமகள், “என்பால் உண்டான வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவர் கொடுமையன்று; என் மனநிலையேயாகும்” என்று கூறியது.
மன்றம் மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇ பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்ன்று தட மென் தோளே . . . . [05]
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇ பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்ன்று தட மென் தோளே . . . . [05]
- கபிலர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங்
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே . . . . [05]
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங்
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே . . . . [05]
பொருளுரை:
பொதுவிடத்திலுள்ள மராத் தின்கண் தங்கும் பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம் கொடுமை யுடையாரை வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்; குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய எம் தலைவர் சிறிதும் அத்தெய்வத்தால் ஒறுத்தற்குரிய கொடுமையை யுடையரல்லர்; என்நெற்றி நான் அவரை விரும்பியதனால் பசலை பெற்றது; என் மனம் அவர் திறத்து ஞெகிழ்ந்தமையால் பரந்த மெல்லிய என் தோள் மெலிவுற்றது.
முடிபு:
கடவுள் கொடியோரைத் தெறூஉம் என்ப; எம் நாடர் கொடியர் அல்லர்; என்நுதுல் பசைஇப் பசந்தன்று; ஞெகிழத் தோள் ஞெகிழ்ந்தன்று.
கருத்து:
என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் காரணரல்லர்.






