குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 080

மருதம் - பரத்தை கூற்று


மருதம் - பரத்தை கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தன்னைப் புறங்கூறினாளென்று கேட்ட பரத்தை அத் தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றோம்: அவள் வலியுடையளாயின் தலைவனை வாராமற் காப்பாளாக!” என்று தன் வன்மைமிகுதி தோன்றத் தன்னை வியந்து கூறியது.

கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சிப்
பெரும் புனல் வந்த இரு துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும், தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின், வெம் போர்
நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி . . . . [05]

முனை ஆன் பெரு நிரை போலக்
கிளையொடும் காக்க, தன் கொழுநன் மார்பே.
- ஔவையார்.

பொருளுரை:

யாம்! எம் கூந்தற்கண் ஆம்பலினது புறவிதழொடித்த முழுப் பூவைச் செருகி வெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி அப்புனல்விளையாட்டைச் செய்வேமாகி செல்வேம்; தலைவி அங்ஙனம் யாம் தலைவனுடன் விளையாடுதலுக்கு அஞ்சுவாளானால் வெவ்விய போரில் பகைவரை நடுநிலை யுண்டாகும்படி வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் பல வேற்படையையுடைய எழினியென்னும் உபகாரியினது போர் முனையிடத்தேயுள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைப் போல தன் கணவனது மார்பை பாங்காயினாரோடும் பாதுகாப்பாளாக.

முடிபு:

யாம் துறை விரும்பிச் சேறும்; தான் அஞ்சுவதுடையளாயின் கொழுநன் மார்பைக் காக்க.

கருத்து:

தலைவன் என்னுடைய விருப்பப்படியே ஒழுகுவானே யன்றித் தலைவி விரும்பியவாறு ஒழுகான்.