குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 034
மருதம் - தோழி கூற்று
மருதம் - தோழி கூற்று
பாடல் பின்னணி:
தலைவியை வரைந்து கொள்ள வந்துள்ளவனே அவளால் விரும்பப்பட்டவனாதலின், இனி அவன் வரைவானென்னும் செய்தியைக் கேட்டு இதுகாறும் உண்டான பலவகைத் துன்பங்களும் இன்றி இவ்வூரினர் மகிழ்வாராக என்று தோழி தலைவன் வரைவொடு வந்தமையைத் தலைவிக்கு உணர்த்தியது.
ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவையின்றாய்,
இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே,
முனாஅது யானையங்குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் . . . . [05]
குட்டுவன் மரந்தை அன்ன, எம்
குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே.
தமியர் உறங்கும் கௌவையின்றாய்,
இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே,
முனாஅது யானையங்குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் . . . . [05]
குட்டுவன் மரந்தை அன்ன, எம்
குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே.
- கொல்லிக் கண்ணனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
தமிய ருறங்குங் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ
டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம் . . . . [05]
குட்டுவன் மரந்தை யன்னவெம்
குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே.
தமிய ருறங்குங் கௌவை யின்றாய்
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ
டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம் . . . . [05]
குட்டுவன் மரந்தை யன்னவெம்
குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே.
பொருளுரை:
முன்னிடத்தில் உள்ளதாகிய கடற்கரையில் உள்ள வண்டாழ்ங் குருகின் பெரிய தொகுதியானது பகைவரைக் கொன்ற வீரரது வென்று முழங்கும் முழக்கத்தினை அஞ்சுதற்கு இடமாகிய குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரைப் போன்ற எமது பனிச்சை விளங்குகின்ற அழகிய நெற்றிக்கு உரிமை உடையோனும் வரைவொடு வரும் அத்தலைவனே யாவான்; ஆதலின் தமர் ஒறுக்கவும் வருத்தத்தினின்றும் நீங்காராகி தோழியர் பல காரணங்கள் கூறி இங்ஙனம் வருந்துதல் தகாதென்று மறுத்துக் கூறவும் தெளியாராகி தலைவரைப் பிரிந்து தனியராய் உறங்குகின்ற வருத்தம் இல்லாதவராகி இவ்வூரில் உள்ளார் அவன் வரைந்து கொள்வான் என்ற இனிய செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைக.
முடிபு:
நுதற்கிழவனும் அவனே; கௌவை இன்றாய் இவ்வூர் இனியது கேட்டு இன்புறுக.
கருத்து:
தலைவன் இனி விரைவில் மணந்து கொள்வான்.






