குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 021
முல்லை - தலைவி கூற்று
முல்லை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தன் வரவுக்குரிய காலமாகத் தலைவன் குறித்துச் சென்ற கார்ப் பருவத்தைக் கண்டு தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் மெய்ம்யை உடையோராதலின், அவர் கூறிய பருவம் இஃதன்று” என்று கூறித்தான் ஆற்றி இருத்தலைப் புலப்படுத்தியது.
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றை,
கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன், அவர் பொய் வழங்கலரே . . . . [05]
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றை,
கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன், அவர் பொய் வழங்கலரே . . . . [05]
- ஓதலாந்தையார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே . . . . [05]
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே . . . . [05]
பொருளுரை:
தோழி! வண்டுகள் தேன் உண்ணுதற்கு வந்து வீழும்படி செறிந்து மலர்ந்த நீட்சியை உடைய பூங்கொத்துக்களை தழைகளின் இடையே மேற்கொண்டு பொன்னால் செய்த அணிந்துகொள்ளுதற்குரிய தலையணிகளை கோத்துக் கட்டிய மகளிருடைய கூந்தலைப் போல கண்ணிற்குத் தோன்றுகின்ற புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களை உடைய காடானது இது கார்ப் பருவமென்று அம் மலர்களால் தெரிவிப்பினும் நான் தெளியேன்; ஏனெனின் தலைவர் பொய்ம்மொழியைக் கூறார்.
முடிபு:
கானம் காரெனக் கூறினும் அவர் பொய் வழங்கலராதலின் யான் தேறேன்.
கருத்து:
இது கார்ப்பருவம் அன்று.






