குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 019
மருதம் - தலைவன் கூற்று
மருதம் - தலைவன் கூற்று
பாடல் பின்னணி:
தலைவி ஊடிய போது அவ்வூடலைத் தான் தெளியச் செய்யவும் தெளியாளாகிப் பின்னும் ஊடிய காலத்தில் தலைவன், “இவள் தன் பழைய தன்மை மாறி நம்மோடு உறவில்லாள் போல் இருக்கின்றாள்” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.
எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி, வாழிய நெஞ்சே, மனை மரத்து
எல் உறு மௌவல் நாறும்
பல் இரும் கூந்தல், யாரளோ நமக்கே . . . . [05]
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி, வாழிய நெஞ்சே, மனை மரத்து
எல் உறு மௌவல் நாறும்
பல் இரும் கூந்தல், யாரளோ நமக்கே . . . . [05]
- பரணர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவ னாறும்
பல்லிருங்கூந்தல் யாரளோ நமக்கே . . . . [05]
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவ னாறும்
பல்லிருங்கூந்தல் யாரளோ நமக்கே . . . . [05]
பொருளுரை:
நெஞ்சே! மனைப் படப் பையில் உள்ள மரத்தின்மீது படர்ந்த ஒளியை உடைய முல்லை மலர்கள் மணம் வீசுதற்கிடமாகிய பலவாகிய கரிய கூந்தலை உடைய இவள் இனி நம் திறத்தில் எத்தகைய உறவினை உடையவளோ! ஏதிலள்போலும் ; ஆதலால் எவ்வி என்னும் உபகாரியை இழத்தலால் உண்டாகிய வறுமையை உடைய யாழ்ப்பாணரது பொற்பூ இல்லாத வறிய தலையானது பொலிவிழந்து இருத்தல்போல பொலிவிழந்து வருந்துவாயாக.
முடிபு:
நெஞ்சே, கூந்தல் நமக்கு யாரளோ! ஆதலின், பாணர் தலைபோலப் புல்லென்று இனைமதி.
கருத்து:
இவள் இப்பொழுது வேறுபாடுடையளானாள்.






