குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 017
குறிஞ்சி - தலைவன் கூற்று
குறிஞ்சி - தலைவன் கூற்று
பாடல் பின்னணி:
தன் குறையை நிறைவேற்ற உடன்படாத தோழியை நோக்கித் தலைவன், "காமம் மிக்கவர்கள் மடலேறுவார்கள்; வரைபாய்தல் முதலியவற்றையும் செய்யத் துணிவார்கள்" என்று தான் மடலேற எண்ணியிருத்தலை உலகின்மேல் வைத்துக் கூறியது.
மாவென மடலும் ஊர்ப, பூவெனக்
குவி முகிழ் எருக்கங்கண்ணியும் சூடுப,
மறுகின் ஆர்க்கவும் படுப,
பிறிதும் ஆகுப, காமம் காழ்க் கொளினே.
குவி முகிழ் எருக்கங்கண்ணியும் சூடுப,
மறுகின் ஆர்க்கவும் படுப,
பிறிதும் ஆகுப, காமம் காழ்க் கொளினே.
- பேரெயில் முறுவலார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
மாவென மடலு மூர்ப பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே.
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே.
பொருளுரை:
காம நோயானது முதிர்வுற்றால் பனை மடலையும் குதிரை எனக் கொண்டு ஆடவர் அதனை ஊர்வர்; குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூ மாலையையும் அடையாள மாலையைப் போல தலையில் அணிந்து கொள்வர்; வீதியில் பிறர் தம்மைக் கண்டு ஆரவாரிக்கவும் படுவர்; தம் கருத்து முற்றாதாயின் சாதலுக்குரிய வரைபாய்தல் முதலிய வேறு செயலை உடையரும் ஆவர்.
முடிபு:
காமம் காழ்கொளின் மடலும் ஊர்ப; கண்ணியுஞ் சூடுப; ஆர்க்கவும் படுப; பிறிதும் ஆகுப.
கருத்து:
நான் மடலூர எண்ணியுள்ளேன்.






