குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 014

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பாங்கியினாற் குறை மறுக்கப்பட்ட தலைவன், "என்னைத் துன்புறுத்தியவள் இன்னாள் என்பதை யாவரும் அறிந்து கூறும்படி மடன் மாஊர்ந்து மறுகிற் செல்வேன்" என்று அப்பாங்கி கேட்பக்கூறியது.

அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுக தில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிக தில் அம்ம, இவ்வூரே! மறுகில்,
நல்லோள் கணவன் இவன் எனப் . . . . [05]

பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
- தொல்கபிலர்.

பொருளுரை:

அமுதத்தின் இனிமை நிரம்பிய செவ்விய நாவானது அஞ்சும்படி முளைத்த நேராகி விளங்குகின்ற கூர்மையாகிய பற்களையும் சிலவாகிய சொற்களையும் உடைய தலைவியை நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக; பெற்றபின்பு இந்த ஊரில் உள்ளார் அறிவாராக; பலர் வீதியில் இந்த நல்லாளுடைய தலைவன் இவன் என்று சொல்லா நிற்க நாம் சிறிது நாணுவேம்!

முடிபு:

யான் பெறுக; ஊர் அறிக; பல்லோர் கூற யாம் நாணுகம்.

கருத்து:

யான் மடல் ஏறுவேன்.