குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 005
நெய்தல் - தலைவி கூற்று
நெய்தல் - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
பிரிவாற்றாமையைால் தலைவி வருந்துதலை அறிந்து கவலையுற்றதோழிக்கு அவள், தன் கண்கள் துயிலாமையை உணர்த்தும் வாயிலாகக்காமநோயின் கொடுமையைக் கூறியது.
அது கொல் தோழி காம நோயே,
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்தெனப்,
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே?
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்தெனப்,
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே?
- நரிவெரூ உத்தலையார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
அதுகொ றோழி காம நோயே
வதிகுரு குறங்கு மின்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லித ழுண்கண் பாடொல் லாவே.
வதிகுரு குறங்கு மின்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லித ழுண்கண் பாடொல் லாவே.
பொருளுரை:
தோழி! தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்குதற்குக் காரணமாகிய இனிய நிழலை உடைய புன்னை மரமானது கரையைச் சாரச்சார உடைகின்ற அலைகளால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணிற்கு இனிதாகியநீர்ப் பரப்பை உடைய மெல்லிய கடற்கரையையுடையதலைவன் பிரிந்தானாக பல இதழ்களைஉடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள் இமைபொருந்துதலைச் செய்யா வாயின; காம நோய் என்பது அத்தன்மைத்தோ?
முடிபு:
தோழி, புலம்பன் பிரிந்தெனக் கண்பாடொல்லா; காம நோய் அது கொல்.
கருத்து:
தலைவன் பிரிவினால் யான் துயில் ஒழிந்தேன்.






