புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
புறநானூறு: 306
ஒண்ணுதல் அரிவை!
ஒண்ணுதல் அரிவை!

பாடியவர் :
அள்ளூர் நன் முல்லையார்.
திணை :
வாகை.
துறை :
மூதின் முல்லை.
குறிப்பு :
இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.
களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,
அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் . . . . [05]
ஒ .. .. .. .. .. .. .. .. .. வேந்தனொடு,
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.
அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் . . . . [05]
ஒ .. .. .. .. .. .. .. .. .. வேந்தனொடு,
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.
பொருளுரை:
விருந்தினர்கள் என் இல்லத்துக்கு வரவேண்டும். என் கணவனுக்கும், வேந்தனுக்கும் நாடு விரிவாக்கும் பகைவனோடு போர் வரவேண்டும். அவள் கடவுளைக் கேட்ட வரங்கள் இவை இரண்டு மட்டுமே. போர் மூண்டால் கணவன் வெற்றி பெறுவான் என்பது அவளது அலாதி நம்பிக்கை. அவள் தழைத்து வளர்ந்த மென்மையான கூந்தலை உடையவள். அரிவை பருவத்தவள் (18-24 ஆண்டு). சிற்றூரில் வாழ்பவள். அரிதாக நீர் ஊறும் கூவல் - கிணறுகளைக் கொண்ட ஊர் அது. கழல் - முள் வேலியைக் கொண்ட ஊர் அது. ஆண் யானைகள் ஒன்றோடொன்று போரிண்டுக்கொள்ளும்போது மிதிபட்டுக் கலங்கும் கழல்முள் வேலி அது. (கழல் முள்ளைக் கழல்கொடி என்று பழைய உரை குறிப்பிடுகிறது. இது வரப்பூலா - முள் அல்லது இண்ட - முள், இண்டு - முள் எனவும் கொள்ளத் தகு.