புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 111

விறலிக்கு எளிது!


விறலிக்கு எளிது!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  வேள் பாரி.

திணை :

  நொச்சி.

துறை :

  மகள் மறுத்தல்.

சிறப்பு :

  பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.


பாடல் பின்னணி:

பறம்பு மலை இரங்கத்தக்கது. அதை வேந்தர்கள் கைப்பற்ற முடியாது. ஆனால் கிணையையுடைய விறலிக்கு எளிதில் அது பரிசாகக் கிடைக்கும் என்று இந்தப் பாடலில் கபிலர் கூறுகின்றார்.

அளிதோ தானே பேர் இரும் குன்றே,
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே,
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.

பொருளுரை:

இரங்கத்தக்க இந்தப் பெரிய கரிய பறம்பு மலையை, வேல் கொண்டு வென்று பெறுவது என்பது பகை வேந்தர்களுக்கு இயலாதது. ஆனால், மை தீட்டப்பட்ட, நீல நிறமுடைய குவளை மலர்களைப் போன்ற கண்களையுடைய விறலி கிணைப் பறையோடு பாடி வந்தால் பறம்பு மலையைப் பெறுவது எளிது.

சொற்பொருள்:

அளிதோ தானே - இரங்கத்தக்கது (அளிதோ - ஓகாரம் அசைநிலை, தானே - தான், ஏ அசைநிலைகள்), பேர் இரும் - பெரிய கரிய, குன்றே - மலை (ஏகாரம் அசைநிலை), வேலின் - வேல் கொண்டு, வேறல் - வெல்லுதல், வேந்தர்க்கோ அரிதே - பகை மன்னர்களுக்கு இயலாது (அரிதே - ஏகாரம் அசைநிலை), நீலத்து - நீல நிறமுடைய குவளை மலர்களின், இணை மலர் - இணைந்த மலர்கள், புரையும் - போல, உண்கண் - மையிட்ட கண்கள், கிணை மகட்கு - கிணைப்பறை இசைக்கும் பெண்ணிற்கு, எளிதால் - எளிதாகும் (ஆல் - அசைநிலை), பாடினள் வரினே - அவள் பாடியபடி வந்தால் (வரினே - ஏகாரம் அசைநிலை)