புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 121

புலவரும் பொதுநோக்கமும்!


புலவரும் பொதுநோக்கமும்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  மலையமான் திருமுடிக்காரி.

திணை :

  பொதுவியல்.

துறை :

  பொருண்மொழிக் காஞ்சி.


பாடல் பின்னணி:

கடையெழு வள்ளல்களுள் ஒருவன் மலையமான் திருமுடிக்காரி. ஒருமுறை கபிலர் மலையமானைக் காணச் சென்றார். மற்ற புலவர்களைப் போலவே கபிலரையும் கருதி வரவேற்றுச் சிறப்புச் செய்தான் மலையமான். அதனை விரும்பாத கபிலர், எல்லா புலவர்களையும் ஒரே விதமாகக் கருதாமல் புலவர்களின் தகுதி அறிந்து நடத்துமாறு வலியுறுத்துகின்றார் இந்தப் பாடலில்.

ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்,
வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்
ஈதல் எளிதே, மாவண் தோன்றல்,
அது நற்கு அறிந்தனை ஆயின், . . . . [05]

பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே.

பொருளுரை:

பரிசில் பெற வேண்டி பலரும் நான்கு திசைகளிலிருந்தும் உன் ஒருவனின் திசை நோக்கி வருவார்கள். மிகுதியாகக் கொடை கொடுப்பது எளிது. ஆனால் பரிசில் பெறுவோரின் தகுதி அறிவது அரிது. பெரும் வண்மையுடைய மன்னனே! அதை நன்கு அறிந்தாய் என்றால் புலவர்களின் தகுதியைக் கருதாமல் ஒரே விதமாய் யாவரையும் நடத்துவதைக் கைவிடுவாயாக.

குறிப்பு:

மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26).

சொற்பொருள்:

ஒரு திசை - ஒரு திசை, ஒருவனை உள்ளி - ஒருவனை நினைத்து, நாற்றிசை - நான்கு திசை, பலரும் - பலரும், வருவர் - வருவார்கள், பரிசில் மாக்கள் - பரிசில் பெற வேண்டி வருபவர்கள், வரிசை - தகுதி, அறிதலோ - அறிதல் என்பது (அறிதலோ - ஓகாரம் அசைநிலை), அரிதே - கடினமானது (அரிதே - ஏகாரம் அசைநிலை), பெரிதும் - பெரியதாக, ஈதல் - கொடை கொடுப்பது, எளிதே - எளிதானது (எளிதே - ஏகாரம் அசைநிலை), மா வண் - பெரிய ஈகை, தோன்றல் - தலைவனே, அது நற்கு அறிந்தனை ஆயின் - அதை நன்கு அறிந்தாய் என்றால், பொது நோக்கு - பொதுவாய் நோக்குவதை, ஒழிமதி - கைவிடுவாயாக (மதி - முன்னிலையசை), புலவர் - புலவர்கள், மாட்டே - இடத்தில் (மாட்டே - ஏகாரம் அசைநிலை)