புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 105

தேனாறும் கானாறும்!


தேனாறும் கானாறும்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  வேள் பாரி.

திணை :

  பாடாண்.

துறை :

  விறலியாற்றுப்படை.


பாடல் பின்னணி:

விறலியர் ஆடுவதிலும் பாடுவதிலும் வல்லவர்கள். அவர்கள் பாணர் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள். வேள்பாரியிடம் சென்று, பாட்டுப்பாடி பரிசு பெறுமாறு ஒரு விறலியிடம் கூறுகின்றார் கபிலர்.

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி,
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப்,
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி
கொள் உழு வியன் புலத்து உழைகால் ஆக . . . . [05]

மால்பு உடை நெடு வரைக் கோடு தொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால், பாடினை செலினே.

பொருளுரை:

ஒளி பொருந்திய நெற்றியை உடைய விறலி! பெரிய சுனையில் தழைத்த கரிய இதழுடைய குவளை மலர்கள் மலர்ந்திருக்க, வண்டுகள் மொய்க்கும் புது மலர்களில் குளிர்ந்த நீர்த்துளி சிதறிக் கலக்க, மழை பெய்தாலும் பெய்யாமல் போனாலும் அருவியானது கொள் பயிரிட உழுத பரந்த நிலத்தினிடத்தில் வாய்க்கால் ஆக ஒட, மூங்கில் ஏணிகள் உடைய நெடிய மலைச் சிகரங்கள் தோறும் கீழே வழியும் நீரை விட இனிய தன்மையுடைய வேள்பாரியிடம் நீ பாடிச் சென்றால், சிவந்த பொன் நிறமுடைய அணிகலன்களைப் பெறுவாய்.

குறிப்பு:

நீரினும் இனிய சாயல் (7) - ஒளவை துரைசாமி உரை - நீரினும் மிக இனிமையுடைய, உ. வே. சாமிநாதையர் உரை - நீரினும் மிக இனிய மென்மையையுடைய. வாள் - வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71). சாயல் - சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29). குறுந்தொகை 95 - நீர் ஓரன்ன சாயல், கலித்தொகை 42 - நீரினும் சாயல் உடையன், புறநானூறு 105 - நீரினும் இனிய சாயல், பதிற்றுப்பத்து 86 - நீரினும் தீந்தண் சாயலன், மலைபடுகடாம் 61 - புது நிறை வந்த புனல் அம் சாயல். தட - தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).

சொற்பொருள்:

சேயிழை - சிவந்த/செம்மையான பொன்னால் செய்த அணிகலன், பெறுகுவை - பெறுவாய், வாள் - ஒளி, நுதல் - நெற்றி, விறலி - இசை, நடனம் புரியும் பெண், தடவுவாய் - பெரிய வாயையுடைய (தடவு வாய் = சுனைக்கு ஆகுபெயர்), கலித்த - தழைத்த, மா இதழ் - கரிய இதழ், பெரிய இதழ், குவளை - குவளை மலர், வண்டு படு - வண்டுகள் மொய்க்கும், புது மலர் - புதிதாய் பூத்த மலர்களிடம், தண் சிதர் - குளிர்ந்த நீர்த்துளி சிதறி, கலாவ - கலக்கும், பெய்யினும் - மழை பெய்தாலும், பெய்யாது ஆயினும் - பெய்யாமல் போனாலும் - அருவி - அருவி, கொள்உழு - கொள் தானியத்தைப் பயிரிட, வியன் புலத்து - பரந்த நிலத்தில், உழைகால் ஆக - வாய்க்கால் ஆக, மால்பு - மூங்கிலின் கணுவிடத்தில் புள் செருகிய ஏணி (மால்பு - கண்ணேணி), உடை - உடைய, நெடு வரை - நெடிய மலை, கோடு தொறு - சிகரம் தோறும், இழிதரும் - கீழே வழியும், நீரினும் - நீரை விட, இனிய சாயல் - இனிய தன்மையுடைய, பாரி வேள் பால் - வேள் பாரியின் இடத்தில், பாடினை செலினே - நீ பாடிச் சென்றால் (செலினே - ஏகாரம் அசைநிலை)