புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 116

குதிரையும் உப்புவண்டியும்!


குதிரையும் உப்புவண்டியும்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  வேள் பாரி.

திணை :

  பொதுவியல்.

துறை :

  கையறுநிலை.

தீநீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்,
ஏந்தெழில் மழைக் கண், இன் நகை, மகளிர்
புன் மூசு கவலைய முள் முடை வேலிப்,
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், . . . . [05]

பீரை நாறிய சுரை இவர் மருங்கின்,
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ;
நோகோ யானே; தேய்கமா காலை!
பயில் இருஞ் சிலம்பிற் கலை பாய்ந்து உகளவும், . . . . [10]

கலையுங் கொள்ளா வாகப்,பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
அண்ணல் நெடுவரை ஏறித், தந்தை
பெரிய நறவின், கூர் வேற் பாரியது . . . . [15]

அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம் படைக் கலிமா எண்ணு வோரே.

பொருளுரை:

மகளிர் - சினையில் பூத்த குவளை மலர்களாலான தழையாடையால் ஒப்பனை செய்துகொண்டிருந்தனர். அழகிய கண்கள். சிரித்த முகம் - இது அவர்களின் தோற்றம். பாரியின் அரண்மனை - புல் வளர்ந்திருக்கும் காட்டுப்பாதை. முள் போட்ட வேலி. பஞ்சு வெடித்திருக்கும் முற்றம். ஈச்சம் இலையால் வேயப்பட்ட சிறிய இல்லம். கூரைமீது சுரைக்கொடி ஏறிப் படர்ந்திருக்கும் இல்லம். பண்டைய விளையாட்டு - இப்படிப்பட்ட வீட்டுக் கூரை மேல் ஏறித் தொலைவில் தோன்றும் உப்பு விற்கச் செல்லும் உமணரின் உப்பு - வண்டிகளை ஒன்று, இரண்டு… என்று எண்ணிக்கொண்டு விளையாடினர். பறம்பு மலை - பூஞ்சோலையில் மயில் ஆடும். மலைக்காட்டில் குரங்குகள்கூட உண்ணாமல் துள்ளி விளையாடும் அளவுக்குப் பருவம் அல்லாக் காலத்திலும் மரங்கள் காய்கனிகளை நல்கும்.