புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 048

'கண்டனம்' என நினை!


'கண்டனம்' என நினை!

பாடியவர் :

  பொய்கையார்.

பாடப்பட்டோன் :

  சேரமான் கோக்கோதை மார்பன்.

திணை :

  பாடாண்.

துறை :

  புலவராற்றுப் படை.

கோதை மார்பிற் கோதை யானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்,
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்,
கள்நா றும்மே, கானல்அம் தொண்டி;
அதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்; . . . . [05]

எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை, நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.

பொருளுரை:

கடற்கானலில் உள்ள தொண்டி நகரம் மணம் கமழும் நல்லூர். அரசன் தோதையின் மார்பில் இருக்கும் கோதைமாலையின் மணம், அவனைத் தழுவுவோர் அணிந்துள்ள மலர்மாலையின் மணம், கழியில் பூத்திருக்கும் நெய்தல் பூவின் மணம் ஆகியவற்றால் தொண்டி தேன் - மணம் கமழும் ஊர். அது என் ஊர். அந்தக் கோதை என் அரசன். முதுவாய் இரவல (புலவனே)! அவனிடம் நீ சென்று அவனைக் கண்டு மீண்டால் என்னையே நீ நினைக்கமாட்டாய். போரில் அவன் மேம்படும்போதெல்லாம் உன் மேம்பாட்டையே அவன் கருதுவான்.