புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 094

சிறுபிள்ளை பெருங்களிறு!


சிறுபிள்ளை பெருங்களிறு!

பாடியவர் :

  அவ்வையார்.

பாடப்பட்டோன் :

  அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை :

  வாகை.

துறை :

  அரச வாகை.


பாடல் பின்னணி:

பெருஞ்சபையில் அரசர்கள் சூழ இருப்பினும், போர்க்களத்தில் படைகள் சூழ இருப்பினும், ஔவையாருக்கும் மற்ற புலவர்களுக்கும் இன்முகமும், இன்சொல்லும் உடையவனாய் இருக்கும் அதியமான் நெடுமான் அஞ்சியின் பண்பைக் குறித்து ஔவையார் இயற்றிய பாடல் இது.

ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,
நீர்த் துறை படியும் பெருங்களிறு போல,
இனியை பெரும எமக்கே, மற்று அதன்
துன் அருங் கடாஅம் போல
இன்னாய் பெரும, நின் ஒன்னாதோர்க்கே . . . . [05]

பொருளுரை:

பெருமானே! தன்னுடைய வெண்மையான தந்தங்களை, ஊரில் உள்ள சிறுவர்கள் கழுவுவதால், நீர்த்துறையில் அமர்ந்திருக்கும் பெரிய யானை இனிமையாக இருப்பது போல நீ எங்களுக்கு இனிமையானவன். ஆனால் அதன் நெருங்க முடியாத மதம்பட்ட நிலைமை எவ்வாறு துன்பம் தருமோ, அது போல, பெருமானே, நீ உன் பகைவர்களுக்கு துன்பத்தை அளிப்பாய்.

குறிப்பு:

கடாஅம் - ஆகுபெயராய்க் கடாம் உண்டாகிய நிலைமை குறித்து நின்றது.

சொற்பொருள்:

ஊர் - ஊரில் உள்ள, குறு மாக்கள் - சிறு பிள்ளைகளுக்கு, வெண்கோடு - வெண்மையான தந்தம், கழாஅலின் - கழுவுவதால் (கழாஅலின் - அளபெடை), நீர்த்துறை - நீர் நிலையின் கரையில், படியும் - படிந்து இருக்கும், அமர்ந்திருக்கும், பெருங்களிறு - பெரிய ஆண் யானை, போல - போல, நீ இனியை - நீ இனியவன், பெரும - பெருமகனே, எமக்கே - எங்களுக்கு, மற்று அதன் - ஆனால் அதனுடைய (மற்று - வினைமாற்றின்கண் வந்தது), துன் - நெருங்க, அருங் - அரிய, கடாஅம் - மதம் கொண்ட நிலை (கடாஅம் - அளபெடை), போல - போல, இன்னாய் - துன்பத்தை அளிப்பாய், பெரும - பெருமகனே, நின் - உனது, ஒன்னாதோர்க்கே - பகைவர்களுக்கு (ஒன்னாதோர் - பகைவர், ஒன்னாதோர்க்கே - ஏகாரம் அசைநிலை)