புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 001

இறைவனின் திருவுள்ளம்!


இறைவனின் திருவுள்ளம்!

பாடியவர் :

  பெருந்தேவனார்.

பாடப்பட்டோன் :

  இறைவன்.

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை . . . . [05]

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; . . . . [10]

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

பொருளுரை:

தலையில் கொன்றைப் பூ சூடியவன். மார்பில் கொன்றை - மாலை அணிந்தவன். ஊர்தி வெண்ணிறக் காளைமாடு. கொடியும் காளைமாடு என்று கூறுகின்றனர். தொண்டையில் நஞ்சுக் கறை. அந்தக் கறை அந்தணர் மறையில் போற்றப்படுகிறது. ஒருபாதி (இடப்புறம்) பெண் - உருவம். அதனைத் தனக்குள் மறைத்துக்கொள்வதும் உண்டு. நெற்றியில் பிறை. அந்தப் பிறையை 18 வகையான தேவ கணங்களாலும் போற்றி வணங்கப்படும். அவன் எல்லா உயிரிங்களுக்கும் பாதுகாவலாக விளங்குபவன். நீர் வற்றாத கரகத்தைக் கையில் வைத்திருப்பவன். தாழ்ந்த சடைமுடியிலும் நீர் வற்றுவதில்லை. இந்தக் கோலத்தில் அவன் தவம் செய்துகொண்டிருக்கிறான்.