புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 142

கொடைமடமும் படைமடமும்!


கொடைமடமும் படைமடமும்!

பாடியவர் :

  பரணர்.

பாடப்பட்டோன் :

  வையாவிக் கோப்பெரும் பேகன்.

திணை :

  பாடாண்.

துறை :

  இயன்மொழி.


பாடல் பின்னணி:

வையாவிக் கோப்பெரும் பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனுடைய கொடைத் தன்மையையும் போர்த் தன்மையையும் இந்தப் பாடலில் பரணர் புகழ்கின்றார்.

அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரி போலக்,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
கொடை மடம் படுதல் அல்லது, . . . . [05]

படை மடம் படான், பிறர் படை மயக்குறினே.

பொருளுரை:

வற்றிய குளங்களில் பெய்தும், அகன்ற வயல்களில் பொழிந்தும், இவ்வாறு பயன்படும் இடங்களுக்கு மட்டும் உதவாமல், எதுவும் விளையாத களர் நிலத்தையும் நிறைத்து வரையறை இல்லாத மரபினை உடைய மழையைப் போன்றது பேகனின் கொடைத்தன்மை. அவன் ஆராயாமல் பரிசளிப்பதால் கொடைமடம் கொண்டவன் எனக் கருதப்படலாம். ஆனால் மதம் கொண்ட யானைகளையும் வீரக்கழல் அணிந்த கால்களையும் உடைய பேகன், பிறர் படையுடன் வந்து போரிட்டால் அறநெறியிலிருந்து தவற மாட்டான். போரிடுவான். அவன் படை மடமை கொண்டவன் இல்லை.

சொற்பொருள்:

அறு குளத்து - வற்றிய குளத்தில், உகுத்தும் - பெய்தும், அகல் வயல் - அகன்ற வயல்களில், பொழிந்தும் - பொழிந்தும், உறுமிடத்து உதவாது - பயன்படும் இடங்களுக்கு மட்டும் உதவாமல், உவர் நிலம் - ஏதும் விளையாத களர் நிலம், ஊட்டியும் - நீர் ஊற்றியும், வரையா மரபின் - எல்லையில்லாத மரபினை உடைய, மாரி - மழை, போல - போல, கடாஅ - கடாம் - மதம் கொண்ட (கடாஅ - அளபெடை), யானை - யானை, கழல் கால் - வீரக்கழல் அணிந்த கால்கள், பேகன் - வையாவிக் கோப்பெரும் பேகன், கொடை மடம்படுதல் - கொடை வழங்குமிடத்தில் அறியாமை அடைதல், அல்லது - இல்லாது, படை மடம்படான் - போர் மடமை இல்லான், பிறர் படை - பிறரின் படை, மயக்குறினே - போரிடக் கலந்தால் (மயக்குறினே - ஏகாரம் அசைநிலை)