புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 134

இம்மையும் மறுமையும்!


இம்மையும் மறுமையும்!

பாடியவர் :

  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

பாடப்பட்டோன் :

  ஆய் அண்டிரன்.

திணை :

  பாடாண்.

துறை :

  இயன் மொழி.


பாடல் பின்னணி:

ஆய் அண்டிரன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். கொடைத் தன்மை மிகுந்தவன். அடுத்த பிறவியின் பலன் கருதாமல் வாரி வழங்குபவன். அறச் செயல்களைச் செய்வது தான் சான்றோர் நெறி என்று உணர்ந்து தானும் அறச் செயல்களைச் செய்கின்றான் என்று இப்பாடலில் புலவர் முடமோசியார் கூறுகின்றார்.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன், பிறரும்
சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மையே.

பொருளுரை:

இப்பிறவியில் செய்யும் ஈகை மறு பிறவிக்கும் நன்மை சேர்க்கும் என்று எண்ணி, நன்மை செய்து அறப் பயனை விலையாகக் கொள்ளும் அறவிலை வணிகன் அல்ல ஆய் அண்டிரன். சான்றோர்கள் பலரும் பின்பற்றிய, நல்வழி என்று உலகத்தார் கருதும்படியான அந்த உயர்ந்த வழியையே தனது வழியாகக் கொண்டது அவனது கொடைச் செயல்கள்.

குறிப்பு:

அறவிலை வணிகன் (2) - ஒளவை துரைசாமி உரை - மறுமைப் பயன் அறப்பயனாதலின் இம்மையில் நலம் செய்து மறுமையில் இன்பம் கருதுவோரை ‘அறவிலை வணிகன்’ என்றார்.

சொற்பொருள்:

இம்மை - இப்பிறவியில், செய்தது - செய்தது, மறுமைக்கு - மறு பிறவிக்கும், ஆம் - ஆகும் (இடைக்குறை, ஆகும் என்பது ஆம் என நின்றது), எனும் - என்னும், அறவிலை வணிகன் - நன்மை செய்து அறத்தை விலையாக கொள்பவன், ஆஅய் - ஆய் அண்டிரன்(அளபெடை), அல்லன் - இல்லை, பிறரும் - பிறரும், சான்றோர் - சான்றோர்கள், சென்ற - பின்பற்றிய, நெறியென - நல்ல வழி என்று, ஆங்கு - அந்த, பட்டன்று - வழிப்பட்டது, அவன் கை - அவனது கையின், வண்மையே - ஈகைத் தன்மை (ஏகாரம் அசைநிலை)