புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 065

நாணமும் பாசமும்!


நாணமும் பாசமும்!

பாடியவர் :

  கழாஅத் தலையார்.

பாடப்பட்டோன் :

  சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது.

திணை :

  பொதுவியல்.

துறை :

  கையறுநிலை.

சிறப்பு :

  புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு.

மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்,
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, . . . . [05]

உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து,
இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன் . . . . [10]

வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,
நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே!

பொருளுரை:

எங்கும் துயரம், எதிலும் துயரம், முழவு முழக்கம் மறந்தது, யாழ் பண் மறந்தது, சமைக்கும் உண்கலம் நெய் மறந்து கவிழ்ந்து கிடந்தது, சுற்றத்தார் வண்டு மொய்க்கும் தேறல் உண்பதை மறந்தனர், உழவர் பாட மறந்தனர், ஊர்த் தெரு விழாக் கொண்டாட்டம் மறந்தது. நிறைமதி நாளில் ஒரு சுடர் (ஞாயிறு) மறைய ஒரு சுடர் (திங்கள்) தோன்றுவது போல, சேரன், சோழன் ஆகிய இருவரில் ஒருவன் வெளிப்பட மற்றொருவன் மறைந்தான். தன்னை ஒத்த அரசன் (கரிகாலன்) தன் வலிமையால் தாக்கிய வேல் தன் முதுகிலும் காயப்படுத்தியதை எண்ணி நாணம் கொண்ட அரசன் (பெருஞ்சேரலாதன்) போர்க்களத்திலேயே உயிர் துறக்கும் உண்ணா நோன்புடன் தன் வாளைத் தன்முன் நிறுத்தி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறான். இனி, பகல் காலம் பண்டு போல் மகிழ்வாகச் செல்லாது.