புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 074

வேந்தனின் உள்ளம்!


வேந்தனின் உள்ளம்!

பாடியவர் :

  சேரமான் கணைக்கால் இரும்பொறை.

திணை :

  பொதுவியல்.

துறை :

  முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்


பாடல் பின்னணி:

சேரமான் கணைக்கால் இரும்பொறையும் சோழ மன்னன் செங்கணானும் பெரும்படையுடன் போரிட்டனர். போரின் முடிவில் சேரமான் தோற்று, கைது செய்யப்பட்டுக் குடவாயிற்கோட்டச் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையில் ஒருநாள் சேரமான் தாகமுற்று, காவலர்களை நீர் கொடுக்குமாறு கேட்டான். சேரமானை அவமதிக்கும்படி சிறைக்காவலன் சில நேரம் கழித்து நீர் கொண்டு வந்து கொடுத்தான். அவமானம் அடைந்த மன்னன் வருந்திப்பாடிய பாடல் இது.

குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்,
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத் . . . . [05]

தாம் இரந்து உண்ணும் அளவை,
ஈன்மரோ இவ் உலகத்தானே?

பொருளுரை:

குழந்தை பிறந்து இறந்தாலும், உறுப்பில்லாத சதைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதையும் ஒரு ஆளாகக் கருதி, வாளால் வெட்டிக் காயம் செய்து புதைப்பார்கள். அந்தக் குடியில் பிறந்த நான் பகைவரின் வாள் பட்டு இறக்காமல், சங்கிலியால் கட்டப்பட்ட நாயைப் போல் துன்பத்தில் ஆழ்த்திய நட்பு இல்லாத பகைவரின் உதவியால் கிடைக்கும் தண்ணீரை, ஒதுக்கும் மன வலிமையின்றி, வயிற்றுப் பசியைத் தணிக்க, கையேந்தி இரந்து உண்ணும் நிலையில் இருக்கின்றேன். இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர் பெற்றனர்?

குறிப்பு:

ஒளவை துரைசாமி உரை - அரசர்க்கு மானத்தின்மிக்க அறனும் பொருளும் இன்பமுமில்லை என்று கூறினமையின் இது முதுமொழிக்காஞ்சி ஆயிற்று. புறநானூறு 93 - பீடு இல் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதல் மறந்து அவர் தீது மருங்கு அறுமார் அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க என வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர்.

சொற்பொருள்:

குழவி இறப்பினும் - குழந்தை இறந்தாலும், ஊன் - தசை, தடி - தசை, பிறப்பினும் - பிறந்தாலும், ஆள் அன்று - ஒரு ஆள் இல்லை, என்று - என்று கருதி, வாளின் - வாளிலிருந்து, தப்பார் - தப்ப மாட்டார்கள், தொடர்ப்படு - சங்கிலியால் கட்டப்பட்டு, சங்கிலியால் பிணிக்கப்பட்டு, ஞமலியின் - நாயைப் போல (ஞமலியின் - இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), இடர் - துன்பம், படுத்து - செய்து, இரீஇய - இருத்திய (இரீஇய - அளபெடை), ஆழ்த்திய, கேள் அல் - நட்பு இல்லாத, கேளிர் - சுற்றி உள்ளவர்கள், வேளாண் - உதவியால் வரும், சிறு பதம் - சிறு உணவானத் தண்ணீர், மதுகை - வலிமை, இன்றி - இல்லாமல், வயிற்றுத் தீ - வயிற்றின் தீ எனும் பசி, தணிய - தணிய, தாம் - தான், இரந்து - கையேந்தி வேண்டி, உண்ணும் - உணவு உண்ணும், அளவை - அளவு உடையவரை, ஈன்மரோ - பெற்றார்களா, இவ் உலகத்தானே - இந்த உலகத்தில் (உலகத்தானே - ஏகாரம் அசைநிலை)