புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 096

அவன் செல்லும் ஊர்!


அவன் செல்லும் ஊர்!

பாடியவர் :

  அவ்வையார்.

பாடப்பட்டோன் :

  அதியமான் மகன் பொகுட்டெழினி.

திணை :

  பாடாண்.

துறை :

  இயன் மொழி.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,
திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, . . . . [05]

விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,
மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ? என
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

பொருளுரை:

என் தலைவனின் (அதியமான் நெடுமான் அஞ்சியின்) இளையோன் (மகன்) (மண் கொள்ளும் போருக்கு அடையானமான) தும்பைப் பூவைச் சூடியவுடன் இரண்டு வகையான பகை உண்டாகிவிட்டது. ஒன்று, அவனைப் பார்த்த பெண்களின் கண்கள் பசப்போடு தாக்குவது. மற்றொன்று, விழா இல்லை என்றாலும் அவன் தன் உறவுக்கூட்டத்துடன் வந்து தம் ஊர்த்துறையில் தங்கி ஆட்டுக்கறி உணவு உண்டு மகிழும்போது அவனது களிறுகள் தமது ஊர்த்துறை நீரைக் கலக்கிவிடுமோ என்று அவன் செல்லும் ஊர்மக்கள் அவன் வருவை வெறுப்பது.