புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 087

எம்முளும் உளன்!


எம்முளும் உளன்!

பாடியவர் :

  அவ்வையார்.

பாடப்பட்டோன் :

  அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை :

  தும்பை.

துறை :

  தானை மறம்.


பாடல் பின்னணி:

அதியமானின் எதிரிகள் அவனோடு போர் செய்யத் திட்டமிட்டனர். அதை அறிந்த ஔவையார் அவர்களிடம் சென்று அதியமானின் வலிமையைப் புகழ்ந்து, போர் செய்வதைத் தவிருங்கள் என்று அறிவுரை கூறுவதை நாம் இப்பாடலில் காணலாம்.

களம் புகல் ஓம்புமின் தெவ்விர், போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன், வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.

பொருளுரை:

பகைவர்களே! போர்க்களத்தில் புகுவதைத் தவிருங்கள். எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்களிடத்தும் இருக்கின்றான். ஒரே நாளில் எட்டு வலிமையான தேர்களைச் செய்யும் திறனுடைய தச்சன் ஒருவன், ஒரு மாதம் கருத்துடன் உழைத்துச் செய்த தேர்ச்சக்கரம் போன்றவன் அவன்.

சொற்பொருள்:

களம் - போர்க்களம், புகல் - புகுதல், ஓம்புமின் - பாதுகாத்துக் கொள்ளுங்கள் (மின் - முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), தெவ்விர் - பகைவர்களே, போர் - போர் செய்ய, எதிர்ந்து - எதிர்த்து, எம்முளும் - எங்கள் உள்ளும், உளன் - உள்ளான், ஒரு பொருநன் - ஒரு போர் வீரன், வைகல் - நாள், எண் தேர் - எட்டுத் தேர்கள், செய்யும் - செய்யும் திறன் கொண்ட, தச்சன் - மர வேலைப்பாடு செய்பவன், திங்கள் - மாதம், வலித்த - கருத்துடன் செய்த, கால் - தேர்ச் சக்கரம், அன்னோனே - போன்றவன் (ஏகாரம் அசைநிலை)