புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 133

காணச் செல்க நீ!


காணச் செல்க நீ!

பாடியவர் :

  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

பாடப்பட்டோன் :

  ஆய் அண்டிரன்.

திணை :

  பாடாண்.

துறை :

  விறலியாற்றுப்படை.


பாடல் பின்னணி:

ஆய் அண்டிரனிடம் பாடிப் பரிசு பெற்ற ஒரு விறலி, மற்றொரு விறலியிடம் ஆய் அண்டிரனின் வண்மையைப் பற்றிக் கூறி, அவனைச் சென்று காணுமாறு வழிகாட்டி அனுப்புவதாக முடமோசியார் இயற்றிய பாடல் இது.

மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியில்
கேட்பின் அல்லது காண்பு அறியலையே,
காண்டல் வேண்டினை ஆயின், மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரை வளி உளரக்
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, . . . . [05]

மாரியன்ன வண்மைத்
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே.

பொருளுரை:

மென்மையான இயல்புடைய விறலியே! நீ ஆய் அண்டிரனின் புகழைப் பற்றிக் கேட்டிருப்பாய். ஆனால் அவனைக் கண்டிருக்க மாட்டாய். அவனைக் காண வேண்டும் என்று விரும்பினாய் ஆயின், அழகுடைய உன் நறுமணமான கூந்தலை மலை காற்றுப் புகுந்து கோதிட, தோகை விரித்த மயில் போலக் காட்சியளிக்கும்படியாகச் செய்து, மழை போல் கொடை வழங்கும் தேரை உடைய ஆய் அண்டிரனைக் காண்பதற்குச் செல்வாயாக.

சொற்பொருள்:

மெல்லியல் - மென்மையான இயல்புடைய, விறலி - இசையும் நடனமும் புரியும் பெண்ணே, நீ - நீ, நல்லிசை - நல்ல புகழ், செவியில் - காதில், கேட்பின் அல்லது - கேட்டிருப்பாய் ஆனால், காண்பு அறியலையே - கண்டிருக்க மாட்டாய் (அறியலையே - ஏகாரம் அசைநிலை), காண்டல் - காண்பதற்கு, வேண்டினை ஆயின் - விரும்பினாய் ஆயின், மாண்ட - மாட்சிமைப் பட்ட, நின் - உனது, விரை வளர் - நறுமணம் உடைய, கூந்தல் - கூந்தல், வரை - மலை, வளி - காற்று, உளர - கோதிட, கலவ - பீலி, இறகு, மஞ்ஞையின் - மயிலைப் போல (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), காண்வர - காட்சியுண்டாக, இயலி - நடந்து, மாரி - மழை, அன்ன - போல, வண்மை - ஈகை, தேர் - தேர், வேள் ஆயை - வேள் குடியின் ஆய் அண்டிரனை, காணிய - காண்பதற்கு, சென்மே - செல்வாயாக (சென்மே - முன்னிலை ஏவல் வினைமுற்று)