புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 188

மக்களை இல்லோர்!


மக்களை இல்லோர்!

பாடியவர் :

  பாண்டியன் அறிவுடை நம்பி.

திணை :

  பொதுவியல்.

துறை :

  பொருண்மொழிக் காஞ்சி.


பாடல் பின்னணி:

மக்கட்பேற்றால் வரும் இன்பத்தைச் சிறப்பித்துப் பாடுகின்றான் பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி.

படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், . . . . [05]

மயக்குறு மக்களை இல்லோர்க்குப்,
பயக்குறை இல்லைத், தாம் வாழும் நாளே.

பொருளுரை:

படைக்கப்படும் செல்வங்கள் பலவற்றைப் படைத்துப் பலரோடு உணவு உண்ணும் உடைமை கொண்டபெரும் செல்வந்தர் ஆயினும், குறுக்கிட்டுச் சிறுச் சிறு அடியெடுத்து நடை செய்து, சிறு கைகளை நீட்டி, உணவைக் கீழே இட்டும், கைகளால் பிசைந்து தோண்டியும், வாயால் கவ்வியும், கைகள் கொண்டு துழவியும், நெய் சேர்த்த உணவை உடலெங்கும் படுமாறு சிதறி மனதை மயக்கும் சிறு குழந்தைகள் இல்லாதோர்க்கு தாங்கள் வாழும் நாட்களால் பயனும், நிறைவும் இல்லை.

குறிப்பு:

குறை (7) - உ. வே. சாமிநாதையர் உரை - இன்றியமையாப் பொருள்.

சொற்பொருள்:

படைப்பு - படைக்கப்படும் செல்வம், பல - பலவற்றை, படைத்து - செய்து, பலரோடு - பலருடன், உண்ணும் - உணவு உண்ணும், உடை - உடைமை கொண்ட, பெருஞ் செல்வர் - பெரும் செல்வந்தர்கள், ஆயினும் - ஆனாலும், இடைப்பட - குறுக்கிட்டு, குறு குறு - குறுகக் குறுக, நடந்து - நடந்து, சிறு கை நீட்டி - சிறிய கைகளை நீட்டி, இட்டும் - கீழே இட்டும், தொட்டும் - கைகளால் பிசைந்து தோண்டியும், கவ்வியும் - வாயால் கவ்வியும், துழந்தும் - துழாவியும், நெய்யுடை - நெய் உடைய, அடிசில் - உணவு, மெய்பட - உடம்பில் பட, விதிர்த்தும் - சிதறியும், மயக்குறு மக்களை - மயக்கும் சிறு குழந்தைளை (மக்களை - இரண்டாம் வேற்றுமை விரி), இல்லோர்க்கு - இல்லாதோர்க்கு, பயக்குறை இல்லை - பயனாகிய நிறைவு இல்லை (இரா. இளங்குமரன் உரை - பயக்குறை - பயக்கு + உறை, பயன் அமைதல்), தாம் வாழும் - தாங்கள் வாழும், நாளே - நாட்களில் (நாளே - ஏகாரம் அசைநிலை)