புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 194

முழவின் பாணி!


முழவின் பாணி!

பாடியவர் :

  தெரியவில்லை.

பாடப்பட்டோன் :

  தெரியவில்லை.

திணை :

  தெரியவில்லை.

துறை :

  தெரியவில்லை.

ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்! . . . . [05]

இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.

பொருளுரை:

ஓர் இல்லத்தில் நெய்தல் பறையின் ஒலி கேட்கிறது. (நெய்தல்பறை என்பது இரங்கல் - பண்ணின் ஒலி). மற்றோர் இல்லதில் திருமண முழவின் ஒலி கேட்கிறது. ஒரே நாளில் ஒரே ஊரில் இந்த நிகழ்வுகள். திருமண இல்லத்தில் பூமாலை சூடி மகிழ்கின்றனர். நெய்தல் பண் ஒலிக்கும் இல்லத்தில் ஒருவன் இறந்துவிட்டதால் அவனை இழந்தவர் கண்ணீர் மல்கக் கலங்குகின்றனர். இப்படி உலகியலை ஒருவன் படைத்திருக்கிறான். அவன் பண்பு இல்லாதவன். இந்த உலகம் துன்ப மயமானது. இந்த இயல்பினை உணர்ந்துகொள்ள வேண்டும். அதனை எண்ணிக் கலங்கக் கூடாது. இனியவற்றைக் காணவேண்டும். இன்னாதவற்றில் இன்பத்தைக் காணவேண்டும். துன்பத்தில் இன்பம் காணவேண்டும்.