புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 144

தோற்பது நும் குடியே!


தோற்பது நும் குடியே!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  வையாவிக் கோப்பெரும் பேகன்.

திணை :

  பெருந்திணை.

துறை :

  குறுங்கலி, தாபத நிலை.


பாடல் பின்னணி:

கண்ணகியாரைக் கைதுறந்து ஒழுகும் பேகனின் புறத்தொழுக்கத்தைக் கேள்வியுற்ற பரணர் பேகனிடம் பாடியது இது.

அருளாய் ஆகலோ கொடிதே! இருள் வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின்
கார் எதிர் கானம் பாடினேமாக,
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப, . . . . [05]

இனைதல் ஆனாளாக, “இளையோய்!
கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு” என
யாம் தன் தொழுதனம் வினவக், காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா,
“யாம் அவன் கிளைஞரேம் அல்லேம், கேள்! இனி . . . . [10]

எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும்
வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூரானே”.

பொருளுரை:

நீ அவளுக்கு அருள் செய்யாதது கொடிது. இருள் சூழ்ந்த மாலை வேளையில் சிறிய யாழில் இரங்கல் பண்ணாகிய செவ்வழியில், மழையை ஏற்றுக்கொண்ட உன் காட்டினைப் பாடினோம் ஆக, நீல நிற நெய்தல் மலரைப்போன்ற பொலிந்த மையிட்ட கண்கள் கலங்கி விழுந்த இடைவிட்ட கண்ணீர்த் துளிகள் அணிகலன் அணிந்த மார்பை நனைப்ப, வருந்தி அமையாதவளாக அவள் இருந்தாள். “இளையவளே! நீ உறவினளா எம் நட்பை விரும்புவோனுக்கு?” என்று நாங்கள் அவளை வணங்கி வினவ, அவள் தன் காந்தள் அரும்புப் போலும் விரலாலே தன் கண்ணீரைத் துடைத்து, “நான் அவன் உறவினள் இல்லை. கேள்! இப்பொழுது என்னை ஒத்த ஒருவளின் அழகை விரும்பி, முல்லை வேலியையுடைய நல்லூரின்கண் விளங்கும் புகழையுடைய பேகன் ஒல்லென ஒலிக்கும் தேருடன் எந்நாளும் வருகின்றான் என்று கூறுகின்றனர்.

குறிப்பு:

கிளையை (7) - உ. வே. சாமிநாதையர் உரை - கிளையையோ என ஓகாரமும் என்றாள் என்ற ஒருசொல்லும் வருவித்துரைக்கப்பட்டன. துடையா - துடைத்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சொற்பொருள்:

அருளாய் ஆகலோ கொடிதே - நீ அவளுக்கு அருள் செய்யாதது கொடிது (ஆகலோ - ஓகாரம் அசைநிலை, கொடிதே - ஏகாரம் அசைநிலை) இருள் வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி - மாலை வேளையில் சிறிய யாழில் இரங்கல் பண்ணாகிய செவ்வழியில், யாழ - அசைநிலை, நின் கார் எதிர் கானம் பாடினேமாக - மழையை ஏற்றுக்கொண்ட உன் காட்டினைப் பாடினோம் ஆக, நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் - நீல நிற நெய்தல் மலரைப்போன்ற பொலிந்த மையிட்ட கண்கள் (நீல் - கடைக்குறை, நெய்தலின்- இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப - கலங்கி விழுந்த இடைவிட்ட கண்ணீர்த் துளிகள் அணிகலன் அணிந்த மார்பை நனைப்ப, இனைதல் ஆனாளாக - வருந்தி அமையாதவளாக, இளையோய் கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு - இளையவளே நீ உறவு உடையவளோ எம் நட்பை விரும்புவோனுக்கு (மன் - ஒழியிசைப் பொருளில் வந்த இடைச்சொல்), என யாம் தன் தொழுதனம் வினவ - என்று நாங்கள் வணங்கி வினவ (யாம், தொழுதனம் - தன்மைப் பன்மை), காந்தள் முகை புரை விரலின் கண்ணீர் துடையா - தன் காந்தள் அரும்புப் போலும் விரலாலே தன் கண்ணீரைத் துடைத்து (துடையா - துடைத்து), யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் - நான் அவன் உறவினள் இல்லை, கேள் - கேட்பாயாக, இனி எம் போல் ஒருத்தி நலன் நயந்து - இப்பொழுது என்னை ஒத்த ஒருவளின் அழகை விரும்பி, என்றும் வரூஉம் என்ப - எந்நாளும் வருகின்றான் என்று கூறுகின்றனர் (வரூஉம் - அளபெடை), வயங்கு புகழ்ப் பேகன் - விளங்கும் புகழையுடைய பேகன், ஒல்லென ஒலிக்கும் தேரொடு - ஒல்லென ஒலிக்கும் தேருடன், முல்லை வேலி நல்லூரானே - முல்லை வேலியையுடைய நல்லூரின்கண் (நல்லூரானே - ஏகாரம் அசைநிலை)