புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 184

யானை புக்க புலம்!


யானை புக்க புலம்!

பாடியவர் :

  பிசிராந்தையார்.

பாடப்பட்டோன் :

  பாண்டியன் அறிவுடை நம்பி.

திணை :

  பாடாண்.

துறை :

  செவியறிவுறூஉ.


பாடல் பின்னணி:

பாண்டிய நாட்டை ஆண்டுவந்த மன்னன் அறிவுடை நம்பி மக்களிடம் மிகுந்த வரி வசூலித்துத் துன்பமுண்டாக்கினான். அவனைத் திருத்த யாரும் முன் வரவில்லை. அவனுக்கு அறிவுரை வழங்குமாறு மக்கள் புலவர் பிசிராந்தையாரை வேண்டினர். அவர் மன்னனிடம் கூறிய அறிவுரை தான் இந்தப் பாடல்.

காய் நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மா நிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்,
நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்,
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, . . . . [05]

கோடியாத்து நாடு பெரிது நந்தும்,
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத், . . . . [10]

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

பொருளுரை:

விளைந்த நெல்லை அறுவடை செய்து யானைக்குக் கவளமாகக் கொடுத்தால், ஒரு மா அளவை விட குறைவான நிலத்தில் விளையும் பொருள் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும். நூறு வயல்கள் ஆனாலும், யானை தானாகத் தனித்துப் புகுந்து உண்டால், வாயில் புகுவதை விட அதன் கால்களால் மிகுதியான உணவு வீணாகும். அறிவுடைய வேந்தன் நில வரியை நிர்ணயிக்கும் நெறிமுறை அறிந்து வரியை வாங்கினால், கோடிப் பொருட்களை ஈட்டி நாடு பெரிதும் தழைக்கும். வேந்தன், அறிவால் மெல்லியன் ஆகி நாள்தோறும் தகுதி அறியாத, உறுதித்தன்மை இல்லாத சுற்றத்தோடு சேர்ந்து அன்பு கெட வாங்கும் வரிப் பொருட்களை விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் தன் நாடும் கெடும்.

சொற்பொருள்:

காய்நெல் - காய்ந்த நெல், அறுத்து - அறுவடை செய்து, கவளம் - யானையின் உணவு, கொளினே - கொண்டால், மா - ஒரு சிறிய நில அளவு, நிறைவு - நிறைவாக, இல்லதும் - இல்லாவிட்டாலும், பன்னாட்கு - பல நாட்களுக்கு, ஆகும் - உணவாகும், நூறு - நூறு, செறு - வயல், ஆயினும் - ஆனாலும், தமித்துப் புக்கு - தனித்து புகுந்து, உணினே - உணவு உண்டால் (ஏகாரம் அசைநிலை), வாய் புகுவதனினும் - வாயில் புகுவதை விட, கால் - கால்கள், பெரிது - மிகுதியாக, கெடுக்கும் - கெடுக்கும், அறிவுடை - அறிவுடைய, வேந்தன் - மன்னன், நெறி அறிந்து - வரி நெறி முறை அறிந்து, கொளினே - கொண்டால் (ஏகாரம் அசைநிலை), கோடியாத்து - கோடி ஈட்டி, நாடு - நாடு, பெரிது - மிகவும், நந்தும் - தழைக்கும், மெல்லியன் - அறிவால் மெல்லியன், கிழவன் - வேந்தன், ஆகி - ஆகிட, வைகலும் - நாள் தோறும், வரிசை - தரம், தகுதி, அறியா - அறியாத, கல்லென் - உறுதி இல்லாத, சுற்றமொடு - சுற்றத்தோடு, பரிவு - அன்பு, தப - கெட, எடுக்கும் - வலிய வாங்கும், பிண்டம் - பொருட்கள், வரிப்பணம், நச்சின் - விரும்பினால், யானை புக்க - யானை புகுந்த, புலம் - நிலம், போல - போல, தானும் - தானும், உண்ணான் - உண்ண மாட்டான், உலகமும் - அவனைச் சுற்றியுள்ள உலகமும், கெடுமே - கெடும் (ஏகாரம் அசைநிலை)