புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 199

கலிகொள் புள்ளினன்!


கலிகொள் புள்ளினன்!

பாடியவர் :

  பெரும்பதுமனார்.

திணை :

  பாடாண்.

துறை :

  பரிசில் கடா நிலை.


பாடல் பின்னணி:

பாணர், விறலியர், கூத்தர், பொருநர், புலவர் ஆகியோர் மீண்டும் மீண்டும் செல்வந்தர்களிடம் சென்று பரிசு பெறுவதைப் பற்றித் தன் எண்ணத்தை இப்பாடலில் கூறுகின்றார் புலவர் பெரும்பதுமனார்.

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவு ஆனாவே கலி கொள் புள்ளினம்
அனையர், வாழியோ இரவலர், அவரைப்
புரவு எதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் . . . . [05]

உடைமை ஆகும் அவர் உடைமை,
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே.

பொருளுரை:

கடவுள் வசிக்கும் ஆலமரத்தின் பெரிய மரக்கிளைகளில் இருந்த பழங்களை நேற்று உண்டோம் என்று நினைக்காது, மீண்டும் மீண்டும் அம்மரத்தையே நாடிச் சென்று மகிழும் பறவை இனத்தைப் போன்று வாழ்பவர்கள், பரிசில் பெறும் இரவலர்கள். இரவலர்களை எதிர்கொண்டு வரவேற்கும் பெரும் குணமுடைய புரவலர்களின் செல்வம் தான் இரவலர்களின் செல்வம். புரவலர்கள் வறுமையுற்றால் இரவலர்களும் வறுமை அடைவார்கள்.

சொற்பொருள்:

கடவுள் - கடவுள், ஆலத்து - ஆலமரத்து, தடவுச் சினை - பெரிய மரக்கிளை, பல் பழம் - பல பழங்கள், நெருநல் - நேற்று, உண்டனம் - உண்டோம், என்னாது - என்று நினைக்காது, பின்னும் - பின்பும், மீண்டும், செலவு - செல்லுதல், ஆனாவே - நீங்காது (ஆனாவே - ஏகாரம் அசைநிலை), கலி கொள் - மகிழ்ச்சி கொள்ளும், புள் இனம் - பறவை இனம், அனையர் - போன்றோர், வாழி - அசைநிலை, ஓ - அசைநிலை, இரவலர் - பரிசில் பெறுவோர், அவரை - அவர்களை, புரவு - ஆதரிக்க, எதிர் கொள்ளும் - வரவேற்கும், பெருஞ்செய் - பெரும் செய்கை உடைய, ஆடவர் - ஆண் மக்கள், உடைமை ஆகும் - செல்வம் ஆகும், அவர் உடைமை - இரப்போரின் செல்வம், அவர் இன்மை - அவர்களது (ஆதரிப்போரின்) வறுமை, ஆகும் - ஆகும், அவர் இன்மையே - இரப்போரின் வறுமையும் (இன்மையே - ஏகாரம் அசைநிலை)