புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 014

மென்மையும்! வன்மையும்!


மென்மையும்! வன்மையும்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.

திணை :

  பாடாண்.

துறை :

  இயன்மொழி.

கடுங்கண்ண கொல் களிற்றால்
காப் புடைய எழு முருக்கிப்,
பொன் இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து, சமந் தாங்கவும்;
பார்உடைத்த குண்டு அகழி . . . . [05]

நீர் அழுவம் நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்;
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்! . . . . [10]

வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை,
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும் . . . . [15]

மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய்! நின் பாடுநர் கையே.

பொருளுரை:

கோட்டைக்கதவுத் தடைமரத்தை முரிக்கக் கொல்களிற்றைப் பொன்பூண் போட்ட அங்குசத்தால் வலிமையுடன் குத்திப் போரிட்டுத் தாக்கவும், நிலத்தைப் பிளந்து உருவாக்கிய அகழி நீரை நிவந்து தாண்டும்படிப் போர்க்குதிரைகளை இழுத்துப் பிடிக்கவும், தேர்மீது இருந்துகொண்டு வில்லின் நாணை வலிமையாக இழுத்து எதிராளி வடுக் கொள அம்பு எய்யவும், பரிசிலர்களுக்கு அரிய அணிகலன்களை வழங்கவும். வலிமையாக உள்ளது. என் கை மென்மையாக உள்ளது. ஏனென்றால்… புலால் நாறும் கறித்துண்டைப் பூமணம் கமழும் தீயில் வாட்டி, உணவும், துவையலும், கறிச்சோறுமாக நீ வழங்கியதை உண்டு வருந்தும் தொழில் அல்லது வேறு தொழில் அறியாததால் மென்மையாக உள்ளது.